பக்கம்:சரணம் சரணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சானம் சரணம்

பினும் அபிராமிபட்டர் ஓர் உரிமையை எடுத்துச் சொல் கிறார். நான் உன் தவநெறியில் என் நெஞ்சத்தைப் பயிலும்படி செய்யவில்லை. அதல்ை நீ சினந்து என்னேத். தண்டிக்கலாம்; புறக்கணிக்கலாம். என்றாலும் நான் ஒரு. நியாயம் சொல்கிறேன்’ என்று அவர் கூறவில்லே. இந்தப் பீடிகை இல்லாமலே அவர் பொதுவாக உலக நீதியைச் சொல்வது போலச் சொல்கிறார்,

ஒர் இரவலன் ஒரு செல்வரிடம் சென்று யாசிக்கிருன். அவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரச்சொல்கிறர். இரவலன் அன்று அந்த நேரத்தில் செல்லாமல் தாமத. மாகப் போகிருன். தாமதமாகப் போன குற்றம் தன் னிடம் இருப்பதால், ஒரு கால் அவரைக் காணமுடியாதோ என்றும், கண்டாலும் அவர் கோபம் கொள்வாரோ என்றும் அஞ்சுகிருன். நேரம் கழித்துப் போனபோது, நல்ல வேளை, செல்வர் இருக்கிரு.ர். அவரைக் கண்ட வுடனே, இரவலர்கள் தாமதமாக வந்தாலும் இல்லே யென்று சொல்லாமல் கொடுப்பது வள்ளல்களின் இயல்பு என்று கேட்டிருக்கிறேன்’ என்கிருன். அப்படி அவன் சொல்வதன் கருத்து என்ன? நான் தாமதமாக வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நீ கொடுக்கவேண்டும்’ என் பதையே பொதுப்படையாக வைத்துச் சொல்கிறன். அபிராமிபட்டரும் அந்த உத்தியை ஆளுகிறார். r

‘உலகத்தில் குழந்தைகள் அறியாதவர்களாக இருப்.

பார்கள்: செய்யவேண்டியதைச் செய்யாதவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் அவர்களைப் பெற்ற தாய். மார்கள் மென்மை உடையவர்களாதலின் அவர்கள்

அடிக்கமாட்டார்கள்’ என்று சொல்கிரு.ர்.

அறியார் எனினும் பஞ்சு அஞ்சும் மெல் அடியாங்

அடியார் பெற்ற பாலரையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/78&oldid=680659" இலிருந்து மீள்விக்கப்பட்டது