பக்கம்:சரணம் சரணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் இயல்பு 69

முரட்டுத் தாய்மார்கள் ஒருகால் அடித்தாலும் மென்மையை உடைய தாய்மார்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். மென்மையை உடையவர்கள் என்பதை, பேஞ்சை அஞ்சும் மெல் அடியார்’ என்று குறிப்பிடுகிறார்

• பஞ்சை மிதிப்பதாக இருந்தாலும் அஞ்சுகின்ற மெல்லிய அடியையுடைய பெண்கள்’ என்பது பொருள். அடியின் மென்மையைச் சொன்னலும், பிறஅங்கங்களின் மென்மை -யையும் உள்ளத்தின் மென்மையையும் அதிலிருந்து ஊகித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். இவ்வளவு மென்மையை உடையவர்கள் தம் குழந்தைதள் தவறு செய்தாலும் பொறுத்தருள்வார்களேயன்றி அடிக்கமாட் டார்கள் என்று சொன்னர். அம்பிகையும் மிக மிக மென்மையை உடையவள். யாவருக்கும் தாய். அடியார் களின் அன்பு மிக்க தாய். அடியார்கள் அறியாமையால் தவறு செய்தால் அதற்காக அன்னே தண்டிக்கலாமா? உலகத்துத்தாய்மார்களே தாம் பெற்ற பாலரை அடியார் என்றால், அவர்களினும் எத்தனையோ வகையிற் சிறந்த தெய்வத் தாயாகிய அபிராமியம்மை, பேரருளே வடிவாக இருப்பவள், ஒறுப்பது முறையாகுமா? இவ்வாறெல்லாம் கதோற்றும் படி நல்ல பிள்ளையாகிய அபிராமிபட்டர் தம்மைப் பொல்லாத பிள்ளேயாகச் சொல்லிக்கொண்டு, .உரிமை கொண்டாடுகிறார்,

பஞ்சு அஞ்சும் மெல்லடி என்பதற்கு, செம்பஞ்சுக் குழம்பு பூச வந்தாலும் அதை அஞ்சும் மென்மையை :புடைய அடி என்றும் சொல்லலாம். செம்பஞ்சுக் குழம்பு என்பது மகளிர் அடியில் அணியும் ஓர் அலங்காரப் பூச்சு. “பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவி’ என்பது கம்பன் வாக்கு.

தஞ்சம் பிறிதுஇல்லே ஈதுஅல்லது

என்றுஉன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி

லேன்; ஒற்றை நீள்சிலேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/79&oldid=680660" இலிருந்து மீள்விக்கப்பட்டது