பக்கம்:சரணம் சரணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சரணம் சரண்ம்

அஞ்சு அம்பும் இக்குஅலர் ஆகதின் ருய், அறியார்எனினும்

பஞ்சு அஞ்சும் மெல் அடியார் அடி யார், பெற்றப்ாலரையே.

(நீண்ட தனி வில்லும் ஐந்து அம்புகளும் முறையே கரும்பாகவும் மலராகவும் கைக்கொண்டு நின்ற தேவி, இது அல்லாமல் வேறு பற்றுக்கோடு இல்லேயென்று: உணர்ந்து, நின்னே வழிபட்டுத் தியானிக்கும் தவவழியில் என் மனத்தைப் பழகும் படி செய்ய அடியேன் எண்ண வில்லே, பஞ்சை மிதிப்பதற்கும் அஞ்சுகின்ற மென்மை: யான பாதங்களே உடைய தாய்மார்கள், தாம் பெற்ற பிள்ளேகள் அறியாமையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களேத் தண்டிக்கமாட்டார்கள். -

தஞ்சம்-பற்றுக்கோடு. துனே, உபாயம் பயில்பலகாலும் பழக. சிலே-வில், இக்கு-கரும்பு, அலர்மலர்.

நான் செய்யவேண்டியதைச் செய்யாவிட்டாலும். என் பிழையைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும் என்பது கருத்து. - -

இது அபிராமி அந்தாதியில் 39-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/80&oldid=680662" இலிருந்து மீள்விக்கப்பட்டது