பக்கம்:சரணம் சரணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“72 சரணம் சரணம்

குழந்தைகளுக்குப் பால் இன்பம் தருவது. அம்பிகையின் இனிய மொழிகளோ பாலேவிட இனியவை. பால் வயிற் றுக்கு மாத்திரம் இன்பம் தருவது: வயிற்றுப் பசியைப் போக்குவது. எம்பெருமாட்டியின் திருவாய் மொழியோ கருத்துக்கும், உயிருக்கும் இனிமை தந்து அஞ்ஞானசி2ை மாற்றித் தெளிவை உண்டாக்குவது. இனிமையிலும், பயனிலும் பாலேவிட அம்பிகையின் வாய்மொழி சிறந்தது. ஆகவே, அம்பிகையை அழைத்துத் தாம் பெற்ற பேற்றைச் சொல்ல வருகிறவர்,

பாலினும் சொல் இனியாய்! என்று தொடங்குகிறர்.

ஊடல் உண்டானபோது சிவபெருமான் அன்னேயை வணங்குவது வழக்கம். இதைப் பலவிடங்களில் பக்தர்கள் குறித்திருக்ருர்கள். அபிராமி அந்தாதியிலும் பலவிடங்

களில் இந்தக் கருத்தைக் காணலாம். -

‘மறைநான்கினுக்கும் தானந்த மான சரணுர விந் தம்தவளநிறக் கானந்தம் ஆடரங் காம்எம்பி

ரான்முடிக் கண்ணியதே?? என்றும், -

திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி’ என்றும் முன்பு பாடினர். சிவபெருமான் பலராலும் வணங்குவதற்குரியவர். அவருடைய திருவடியைப் பார்த் தால் அதன்கீழ் முப்பத்து முக்கோடி தேவர்களும் திரு கமாலும் தம்முடைய முடிகளே வைத்து வணங்குவதைக் காணலாம். அத்தகைய பெருமான் தம்முடைய தலையின் மேல் அம்பிகையின் பாதத்தை வைத்திருக்கிருராம். மிகவும் குளிர்ந்த மலர் போன்றது அன்னேயின் திருவடி. அந்தத் திருவடி எம்பெருமானுடைய திருமுடியின்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/82&oldid=680664" இலிருந்து மீள்விக்கப்பட்டது