பக்கம்:சரணம் சரணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடி வைக்கும் இடங்கள் wa

நிற்கிறதாம். அந்தத் திருமுடி பிராட்டியின் திருவடி களுக்கு மெத்தென்று இருக்கிறது. கொன்றை மலரும் சடையும் நிரம்பிய திருமுடி அது. ஆதலின் திருவடியை உறுத்தாமல் மெத்தென்றிருக்கிறது. .

பனிமா மலர்ப் பாதம் வைக்க மாலினும் தேவர் வணங்க நின்றேன்

கொன்றை வார் சடையின் மேலினும்.

அன்னேயின் பாதம் மலர் போன்றது. அது வைக்கும் இடத்திலும் மலர் இருக்கிறது. எம்பெருமானே பணிந்து தலைக்கு அணியாகச் சூடிக்கொள்ளும் திருவுடைய பாதம் * - .

அடுத்த படியாக எம்பெருமாட்டி திருவடியை வைக் கும் மற்றாேர் இடத்தைச் சொல்கிறர்.

வேதங்கள் அந்தத் திருவடியைப் பாடுகின்றன. வேதங்களின்மேலே பெருமாட்டியின் திருவடிகள் நடன மிடுகின்றன. அம்பிகை எழுந்தருளியிருக்கும் சிந்தாமணிக் கிருகத்தின் நான்கு திக்குகளிலும் நான்கு வாயிற்படி களாக நான்கு வேதங்கள் இருக்கின்றன. லலிதா ஸ்தவ ரத்தினம் என்ற நூலில் இந்தச் செய்தி வருகிறது. எம் பெருமாட்டியை அடைவதற்கு நான்கு வேதங்களும் படியாக உதவுகின்றன என்ற கருத்து இதல்ை பெறப் படும். அன்றியும் அம்பிகை தன்னுடைய திருக்கோயிலி விருந்து வெளிவரும்போது நான்கு வேதங்களாகிய படி கண்யும் மிதித்துக்கொண்டு வருவாள். அப்போது அந்தத் திருவடியை ஏந்துகின்ற பீடங்களாக அந்த நான்கு வேதங் களும் இருக்கும். -- r

கீழ்நின்று வேதங்கள் பாடும்

மெய்ப் பீடம் ஒரு நாலினும்.

6-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/83&oldid=680665" இலிருந்து மீள்விக்கப்பட்டது