பக்கம்:சரணம் சரணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சரணம் சரணம்

யாக உணவு சமைக்கச் செய்து அளிக்கிறார். எங்கே. போனலும் நாயை அழைத்துச் செல்கிறர். அவருக்கு ஒர்

ஊரில் வரவேற்புக் கொடுக்கிரு.ர்கள். அப்போது, * சிங்கமே!’ என்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். * களிறே!’ என்றால் பெருமைப்படுவார். ‘நாயே!?? என்

ருல் ஏற்றுக்கொள்ளமாட்டார். நாய் என்ற சொல் உயர வில்லே. காரணம், நாய் என்பது இழிவைக் குறிக்க வந்தது.

நாயை ஏன் இழிவாகக் கருதுகிருேம்? அது மலம் உண்பதல்ை என்று சிலர் கூறுவர். மல. உண்ணும் மற். றொரு விலங்கு பன்றி, பன்றி என்று வைவதில்லே. பன்றி என்ற சொல்லேக் கேட்டால் வைணவர்கள் வராகா வ. தாரத்தையும், சைவர்கள் மதுரை மாநகரில் எம்பெரு. மான் பன்றியாக எழுந்தருளியதையும் எண்ணி உருகு, வார்கள். ஆகவே மலம் உண்பதகுல் நாய்க்கு இழிவு, வந்தது என்று சொல்வது பொருத்தம் அன்று.

அப்படியால்ை நாய் ஏன் இழிந்தது? பிற விலங்கு களிடத்தில் இல்லாத இழிந்த பழக்கம் ஒன்று. நாயினிடம் உண்டு. தான் உண்டதைக் கக்கினல் மீண்டும் அத்னையே உண்ணும் இயல்புடையது நாய். மிக இழிந்த செயல் அது. பிற விலங்குகளிடம் அதைக் காண ஒண்ணுது. நாம் நாயைப் போன்றவர்கள். பட்டறி, கெட்டறி, பத் தெட்டு இறுத்தறி’ என்று சொல்வாக்கள் அநுபவத்தினுல் இன்ன செயல் துன்பத்த்ை தருவது என்று தெரிந்து கொண்டாலும் மறுபடியும் அந்தத் தீய செயலேயே செய்யப் புகுகிருேம் நாம். அந்த வகையில் கக்கியதை உண்ணும் நாய்க்கு ஒப்பாக இருக்கிருேம். இதை எண்ணியே,

நாயேனையும்.

என்று சொன்னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/88&oldid=680670" இலிருந்து மீள்விக்கப்பட்டது