பக்கம்:சரணம் சரணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்று பேறு 79

இத்தகைய பக்குவம் அற்ற எளியேன இங்கிருந்த படியே நலம் பெறும்படி செய்தாய்’ என்பதைக் குறிக்க “இங்கு என்றர். இந்திராதி தேவர்களையும் பொருளாக மதிக்காமல், மகா ஞானிகளாகிய அடியார்களே உடைய எம்பெருமாட்டி என்னேயும் ஒரு பொருளாகத் தன் னுடைய அருளுக்குத் தகுதி உடையவகை எண்ணினுள் ; எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வலிய வந்தாள். இக் கருத்துத் தோன்ற,

ஒரு பொருளாக நயந்து வந்து

என்கிறார்,

‘இறைவியினுடைய திருவருளைப் பெறவேண்டுமென்ற நயப்பு அல்லது விருப்பம் எனக்கு இல்லாதிருந்தும், தன். னுடைய அருகா அடியேனுக்குத் தர வேண்டுமென்ற. விருப்பம் எம்பெருமாட்டிக்கு எழுந்தது’ என்கிறர்.

உண்மையில் உலகத்திலுள்ள உயிர்க் கூட்டங்கள் இறைவனே நோக்கிச் செய்கின்ற பக்தியைக் காட்டிலும் இறைவனுக்கு அவர்கள் பால் உள்ள அருள் மிகச் சிறந்தது.

தீர்ந்த அன் பாய அன்பர்க்

கவரினும் அன்ப போற்றி??

என்று கூறுவர் மாணிக்கவாசகர். இறைவன் தன்னுடைய அருளைச் சுமையாகத் தாங்கிக் கொண்டிருக்கிருன். சுமை யைத் தாங்கிக் கொண்டு செல்லும், ஒருவன் சுமைதாங்கி எங்கே இருக்கிறது என்று ஏங்குவதைப்போல, யாரேனும் நம்முடைய அருளைப் பெற வரமாட்டான என்று ஆண்டவன் ஏங்கியிருக்கிருன். குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாதபோது பால் கட்டிக்கொண்டு துன்புறு. கிற தாய்போல, எம்பெருமாட்டி தன்னுடைய அருளைப் பெற யார் இருக்கிறர்கள் என்று ஏங்கிக் கிடக்கிருள். ஆகவே அவளாகவே வலியப் பக்தன் இருக்கும் இடத் திற்கு வருகிருனாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/89&oldid=680671" இலிருந்து மீள்விக்கப்பட்டது