பக்கம்:சரணம் சரணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

வெளியிட்டிருக்கிறேன். அவற்றைப் படித்த அன்பர்கள் அந்த முறையைப் பாராட்டினர்கள். அந்த முறையையே பின்பற்றி அபிராமி அந்தாதி விளக்கக் கட்டுரைகளேச் சங்கர கிருபாவில் மாதந்தோறும் எழுதத் தொடங்கி னேன். இன்னும் இந்தக் கட்டுரை வரிசை அந்தப் பத்திரி கையில் வந்துகொண்டிருக்கிறது.

கட்டுரைகளைப் படித்த அன்பர்கள் அவை புத்தக வடிவில் வந்தால் ஒருசேரப் படித்துப் பயன் பெறலாம் என்று சொன்னர்கள்; கடிதம் எழுதினர்கள். அவர்கள் விருப்பத்தை அறிந்து சங்கர கிருபாவில் வந்த கட்டுரை கனேத் தொகுத்துச் செப்பம் செய்து இருபத்தைந்து பாடல்கள் அடங்கிய பகுதிகளாக வெளியிட முன்வந் தேன், முதல் இருபத்தைந்து பாடல்களின் விளக்கம் ‘எழில் உதயம் என்னும் பெயரோடு வெளியாயிற்று. 26 முதல் 50 வரையில் உள்ள பாடல்களின் விளக்கம், ! unir‍ பூண்ட மலர்?’ என்ற பெயரோடு வெளிவந்தது. இப்போது 51 முதல் 75 வரையில் உள்ள பாடல்களுக்குரிய விளக்கம் சேரனம் சரணம்?? என்ற பெயருடன் வெளியாகிறது. : எந்தக் கடவுளே அன்பர்கள் உபாசனே செய்தாலும் அவர்களுக்கு உண்டாகும் அநுபவம் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆற்றுநீர், குளத்துநீர், ஊற்றுநீர் என்று வெவ் வேறு நிலைகளிலுள்ள நீரைக் குடித்தாலும் தாகம் தீர்வது என்ற அதுபவம் எல்லோருக்கும் ஒன்றகவே இருக்கும். இறைவனே வழிபட்டு அவன் அருளறுபவத்தைப் பெற்ற வர்களின் திருவாக்கை ஊன்றிப் பார்த்தால், தாம் பெற்ற அநுபவத்தை அவர்கள் சொல்லும் பகுதிகள் பெரும் ப்ாலும் ஒத்து நிற்பதைக் காணலாம். ஆதலால் இந்த விளக்கக் கட்டுரைகளில் மாணிக்கவாசகர், அருணகிரி நாதர், தாயுமானவர் முதலிய அநுபூதிமான்களின் திரு வாக்குகளே ஒப்புமையாகக் காட்டியிருக்கிறேன். எந்த வகையான நூலானலும் அதிலுள்ள பல கருத்துக்களுக்கு அரண் செய்வனவாக்த் திருக்குறட்பாக்கள் விளங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/9&oldid=680672" இலிருந்து மீள்விக்கப்பட்டது