பக்கம்:சரணம் சரணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சரணம் சரணம்

சொல்லலாமா? அப்படி இல்லை, பக்குவிகள் எல்லாம் எத்தகைய அருளைப் பெற்றர்களோ அதே அருகா இவரும் பெற்றாராம்.

அன்னே தன்னுடைய சொரூபத்தின் லேசத்தை மட்டும்காட்டி, இது இவனுக்குப் போதும் என்று இருக்க வில்லே. தன்னுடைய பரிபூரணமான சொரூபத்தை நன்றாகத் தரிசிக்கும்படி காட்டி அருள் செய்தாள். நின்னே உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய். தம்மைப் பேயேன் என்று சொல்லிக் கொள்கிருச்.

‘உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்

வையதது. அலகையா வைக்கப்படும்?? என்பது குறள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் கடவுள் உண்டு, பிறப்பு இறப்பு உண்டு, புண்ணிய பாவங்கள் உண்டு, சொர்க்க நரகம் உண்டு என்று பல காலமாகச் சொல்லிய உண்மைகளே இல்லை என்று சொல்பவன் யாரோ அவனே உலகத்தில் கண்கண்ட பேய் என்பது இதன் பொருள். பெரியவர்கள் சொல்வனவற்றை அறிந்து கொள்ளாமல் அவற்றைப் பிழை என்று செனல் கிற நிலையில் இருந்த எளியேன நீ ஆண்டு கொண்டாய்” என்கிற குறிப்பை வைத்து, பேயேன்” என்று சொன்னர்.

பேயேன் அறியும் அறிவு தந்தாய்.

அறியும் அறிவு என்பது அநுபவத்தோடு அறியும் அறிவைச் சுட்டியபடி, எந்த விதமான தகுதியும் இல்லா மல் என்னல் பெறுவதற்கரிய முழு இன்பத்தைப் பெற். றேனே! இத்தகைய பேறு யார் பெற்றார்? நான் பெற்ற, பேறு எத்தகையது!’ என்று வியக்கிரு.ர்.

என்ன பேறு பெற்றேன்! . காயே, மலேமகளே,செங்கண்மால்.திருத்தங்கைச்சியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/92&oldid=680675" இலிருந்து மீள்விக்கப்பட்டது