பக்கம்:சரணம் சரணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற பேறு 8

நாயே னேயும்.இங் கொருபொரு

ளாக நயந்துவந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண்

டாய்; நின்னே உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்

தாய்; என்ன பேறுபெற்றேன்! தாயே, மலேமகளே, செங்கண் மால்திருத் தங்கைச்சியே!

(அடியேனுடைய தாயே, மலேயரசனகிய இமவான் புத்திரி ஆகிய பார்வதியே, சிவந்த கண்ணையுடைய திரு. மாவின் அழகிய தங்கையே, நாய் போன்ற என்னேயும், நின் அருளுக்குரிய பொருளாகத் திருவுள்ளங் கொண்டு. விரும்பி நீயே இங்கே வலிய வந்து, இவனே ஆட்கொள்ள லாமா கூடாதா என்ற நினேவும், ஆட்கொள்வதற்குரிய தகுதி இன்னது என்ற நினைவும், நாம் இன்ன உயர் நிலையில் இருக்கிருேம் என்ற நினைவும் இல்லாமல் அடி யேனை அடிமை கொண்டாய். நீ இருந்த இயல்பைப் பேய் போன்ற அடியேன் அறியும் அதுபவத்தை அருளிய்ை.

அடியேன் எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன்!

இங்கு-நான் இருக்கும் இடத்தில். பொருள்-ஏற்றுக் கொள்ளும் பொருள் நயத்தல்-அருள் செய்வதற்கு விரும்புதல். நீயே என்றது, வேறு யாரையும் ஏவாமல் என்ற குறிப்பையுடையது. நின்வின்றி. நினைந்து பார்ப்ப தாயின் யான் அருளைப் பெறமாட்டேன் என்ற குறிப்பை புடையது. உள்ள வண்ணம் என்றது எம்பெருமாட்டியின் பரத்துவத்தை. செங்கண்மால் திருத்தங்கைச்சி. பத்மநாப: சகோதரி (ல. ச. 280); மோல் தங்கச்சி கணிகை உமை??

(திருப்புகழ்)) -

இது அபிராமி அந்தாதியின் 61-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/95&oldid=680678" இலிருந்து மீள்விக்கப்பட்டது