பக்கம்:சரணம் சரணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியிட்ட நாயகி 89

திரிபுர சங்காரத்தை நினைவூட்டும் தலம் திருவதிகை; திருவதிகை வீரட்டம் என்று அது வழங்கும்.

திரிபுரம் எரித்த வீரத்தை முதலில் சொன்ன அபிராமி வட்டர் அதன் பிறகு சிவபெருமான் கஜா சுரனே வென்ற வீரச் செய8லச் சொல்கிறார், -

தங்கச் சிலேகொண்டு தானவர்

முப்புரம் சாய்த்து மத

வெங்கண் கரி உரி போர்த்த செஞ்

சேவகன்,

யான வடிவில் கஜாசுரன் இருந்தான். அவன் எல்லேர் ருக்கும் துன்பத்தைச் செய்தான். அவனுடைய துன்பத் தைத் தாங்காமல் தேவர்களும், முனிவர்களும் இறை வனிடம் முறையிட்டுக் கொண்டார்கள். அதனல் எம் பெருமான் அந்த யானையை அட்டு, அதன் தேர்ல்ே உரித்துப் போர்த்துக் கொண்டான். அதல்ை கிருத்தி வாசன் என்ற பெயர் எம்பெருமானுக்கு அமைந்தது. இது வும் மேலே சொன்ன் எட்டு வீரச்செயல்களில் ஒன்று. இதனை நினைப்பூட்டும் இடம் தாருகாவனம் என்னும் வழுவூர். அதனை வழுவூர் விரட்டம் என்றே சொல்வர்ர்கள்.

வெங்கண் கரி உரிபோர்த்த செஞ்சேவகன்.

எல்லோரும் அறியப் பகைவர்களோடு எதிர்நின்று போர் செய்வதைச் செஞ்சேவகம் என்று சொல்வார்கள். சிவபெருமான் பொல்லாதவர்களுக்குத் தன்னுடைய வீரத் தைக் காட்டி, அவர்களும் தன்னச் சரணுகதி அடைந்தால் அவர்களுடைய குற்றத்தைப் பொறுத்து அருள் செய்ய லாம் என்று இருப்பவன். பகைவர்களாக வருகிறவர்கள் அகந்தையால் தம்முடைய குற்றத்தை உணராமல் மேலும் மேலும் செருக்குற்றுப் போரிட்டார்களானல் அவர்கரே

- 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/99&oldid=680682" இலிருந்து மீள்விக்கப்பட்டது