பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொக்கலிங்கம், ஏ. ஜி. வெங்கடாச்சாரி, கே. அருணசலம், எம். எஸ். சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் அரசியல் கட்டுரைகள் அதிகமான இடத்தை ஆக்ரமித்துக் கொண் டுள்ளன. கதைக் கலேயில் வளர்ச்சிபெற விரும்பிய புது எழுத்தாளர்களின் சிறுகதைகளே 1938 முதல், 1939-ல் ‘மணிக்கொடி நின்றுவிடுகிறவரை மிகுதியாக வந்துள்ளன. புரசு பாலகிருஷ்ணன், லா. ச. ராமாமிர்தம் போன்றவர்கள் இக் காலகட்டத்தில் அந்தப் பத்திரிகையைத் தங்கள் பயிற்சித் தளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிருர்கள்.

இந்த இடத்தில், இலக்கியம் - பத்திரிகை சம்பந்தப்பட்ட மற்றுமொரு உண்மையையும் எடுத்துக்கூற வேண்டும்.

படைப்பாளிகள், இலக்கிய கர்த்தாக்கள் என்று பெருமைப் பட்டுக் கொள்கிற சிலர் பத்திரிகைகளை மட்டமாகப் பேசுவ தில் உற்சாகம் கண்டு வந்திருக்கிருர்கள். பத்திரிகைகளின் துணை இல்லாமல் எழுத்தும் எழுத்தாளர்களும் வளர்ச்சி பெறுவதில்லை. ஆற்றல்மிக்க எழுத்தாளர்களின் துணை இன் றிப் பத்திரிகைகள் தனிச்சிறப்பு அடைவதும் இல்லை.

"மணிக்கொடி நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட் டில் அதிகமான பத்திரிகைகள் இருந்ததில்லை. மணிக்கொடி’ வாழ்க்கையின் சகல தன்மைகளையும் ஆழமாகக் கவனித்து உணர்ச்சியோடு சித்திரிக்கும் போக்கை வரவேற்றது. ஆனந்தவிகடன் வாழ்வின் மேலோட்டமான தன்மைகளே இன்பகரமாகவும் நகைச்சுவையோடும் சித்திரிக்கும் போக்கை வளர்த்துக் கொண்டிருந்தது. இரண்டுக்கும் நடுவான நிஜல மையை-மிதவாதத்தை - கலைமகள் ஆதரித்து வந்தது.

அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் இதழ்களிலும் தரமான, நல்ல கதைகள் வரத்தான் செய்தன. பழந்தமிழ் இலக் கியத்தில் ஆர்வமும், மேலும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் உணர்வும், உண்டாக்கும் வகையில் அறிமுகக் கட்டு ரைகளும் வெளிவந்துள்ளன.

4 / சரஸ்வதி காலம் 迈

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/10&oldid=561090" இலிருந்து மீள்விக்கப்பட்டது