பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

18. எதிரொலிகள்

ஜெயகாந்தன் கதைகள் எழுதுகிற போது, கூடு விட்டுக் கூடு பாய்ந்து அக் கதாபாத்திரங்களாகவே தான் ஆகிவிடு வதாகவும், தான் அனுபவிக்கும் உணர்ச்சிகளே அப்படியே எழுத்தாக்கி விடுவதாகவும் விளக்கம் கூறியதை ஏற்றுக் கொண்டும், எதிர்த்தும் ஏகப்பட்ட கடிதங்கள் வந்தன. அவற் நில் சில சரஸ்வதி'யில் பிரசுரிக்கப்பட்டன. அக்டோபர் 1957 இதழில்.

பிரசுரம் பெற்றவற்றில் இரண்டு அபிப்பிராயங்கள் முக்கிய Eாக எடுத்துச் சொல்லப் பட வேண்டியவை. ஒன்று துரத்துக் குடி எஸ். ஏ. முருகானந்தம் எழுதியது. மற்றது, பேராசிசி வர் நா. வானமாமலை தெரிவித்தது.

"கூடுவிட்டுக் கூடுபாய முடியுமா?’ என்று கேட்டிருந்தார் முருகானந்தம், எழுத்தாளன் ஒரு சம்பவத்தை எழுதும் போது அந்தப் பாத்திரமாக மாறிவிட்டால்தான் சரியாக எழு த முடியும் என்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனுல் அந்தப் த்திரமாக பரிபூர்ணமாக மாறி விட்டேன் என்பது சாத்தி ல. ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிற உணர்ச்சிகளே ஆசா பாசங்களே ஆளுக உள்ள பெரியாழ்வாரோ பாரதியோ ஜெய காந்தனுே அப்படியே கூறிவிட முடியும் என்பதை என் ல்ை ஏற்கமுடியவில்லே. கழைக் கூத்தாடியின் கஷ்டத்தைப் ார்க்கிறவன் அப்படியே அவனுக்கு ஏற்படுகிற உணர்ச்சி களே எழுதிவிட முடியுமா? இவரே கூத்தாடியாக இருந்தால் தான் உண்மையை அணுவளவும் குறைக்காமல் கூற முடி யும். பெண்ணுக இல்லாத அதுவும் தாயாக இல்லாத ஒரு வரால் கூறவே முடியாது, தாயாகவே மாறிவிட்டேன் எனக் கூறுவது தன்னே அதிகப்படுத்திக் கூறுவதாகும்.

பெரியாழ்வார் பாட்டும், பாரதி பாட்டும் படிப்பவர்களுக்கு

94 / சரஸ்வதி காலம் {I}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/100&oldid=561181" இலிருந்து மீள்விக்கப்பட்டது