பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களின் வாழ்வுக்கு வழிகாட்ட, அவர்களுக்குச் சரியான பண்புக்குத் திசைவழி காட்ட, எழுத்து உதவியாக இருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

நா. வானமாமலே, ஜெயகாந்தன் கதைகள் பற்றி உங்கள் குரலில் வெளிவந்த மதிப்புரைகளே, முக்கியமாக சகோதரி கண்ணம்மாள் எழுதியதை. குறிப்பிட்டு விட்டுத் தனது எண்ணத்தை விரிவாகக் கூறியிருந்தார். *

"இலக்கியத்தில் சிற்றின்ப உணர்ச்சிக்கு இடம் உண்டா என்ற கேள்வியை யாரும்கேட்க மாட்டார்கள். ஏனென்ருல் உலக இலக்கியமனத்தும் அதனை அடிப்படையாகக் கொண் டது. இணைவிழைச்சு என்று தொல்காப்பியர் பெயரிட்டு அழைக்கும் ஆண் பெண் கவர்ச்சி சங்க கால அக இலக் கியங்கள் முதல் பாரதி வரை இலக்கியத்துக்கு உயிரூட்டும் உயிர் மூச்சாக இருந்து வருகிறது. இவ்வுணர்ச்சி பல சமூகக் கட்டுப்பாடுகளிடையே வெளிப்படும் விதங்களேத்தான் மிகப் பெரும் காவியங்கள் முதல் சிறுகதைகள் வரை சித்தரிக் கின்றன.

இவ்வுணர்ச்சி களைந்தெறிய முடியாத மனப்பண்பு. களைந் தெறிய முயன்ற சமணமுனிவர்கள் தங்கள் தோல்வியை, காமநூல்கள் எழுதியதன் மூலம், ஒப்புக் கொண்டார்கள். உதாரணங்கள் - சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி.

உலகப் புகழ்பெற்ற இலக்கியமேதைகளான விக்டர்ஹியூகோ, எமிலி லோலா, டாஸ்டாவ்ஸ்கியும், டிக்கன்ஸ், டால்ஸ் டாய், தாகூர் போன்றவர்கள் ஆண் பெண் உணர்ச்சியைச் சித்திரிக்கிருர்கள். அதிலும் எமிலிஸோலாவும், டாஸ்டாவ்ஸ் கியும், கெட்டுச் சீரழிந்தவர்களாக கருதப்படும் வேசிகளேத் தான் தங்கள் கதாநாயகிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண் டார்கள். அவர்களே சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்க ளாகக் காட்டி, அவர்கள் மீது நம்மை அனுதாபம் கொள்ளச் செய்கிருர்கள். சமூகத்தின் பழமை எண்ணங்களே இச்சித்தி

96 / சரஸ்வதி காலம் 夏翔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/102&oldid=561183" இலிருந்து மீள்விக்கப்பட்டது