பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் எனக்குத் தோன்றுகிறது. வீடு வாசலற்ற அளுதை களுக்கும் இணேவிழைச்சு உண்டு; அவர்களுக்கும் மானம் மரியாதையுண்டு; அவர்களும் சிற்றின்ப”த்தை விழைபவர் கள்; அவர்களுக்கும் இன்பமாக வாழ ஒரு சிறு வீடாவது வேண்டும் என்ற கருத்தை மிக அழகாக ஒரு கதையில் சித்தரித்துள்ளார். பூங்காவில் ஆபாசமான காட்சியைக் கா னும் கனவான்களுக்கு, அதன் காரணத்தை ஒரு சவுக்கடி யின் மூலம் உணர்த்துகிருர், அவருடைய கதைகளில் புலனு ணர்வு சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. சிற்றின்பத்தைத் துண்டிவிடுகிறது என்ருல், அது அவருடைய தவறல்ல. நம்முடைய மனத்தில் ஒழுக்கத்தைப் பற்றிய எண்ணங்களே சமூகத்தின் பாதுகாவலர்கள் உருவாக்கியிருப்பதே இவ்வாறு இணைவிழைச்சின் உண்மைகளே நாம் காண மறுப்பதற்குக் காரணம்.

அவருடைய கதையில் டாஸ்டாவ்ஸ்கியின் சாயலே நான் காண்கிறேன். அதோடு நின்று விடாமல் எல்லாச் சமூக உண்மைகளையும் அச்சமின்றி, எதிர்ப்புக்குப் பணிந்து விடா மல் தன் கதைகளில் அவர் மேலும் பறையறைந்து கூறு வார் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று வானமாமலை எழுதி

ஜெயகாந்தன் கதைகளைப் பற்றிய விவாதம் இத்துடன் முடிவடைகிறது என்று ஆசிரியர் அறிவிப்பும் வெளியிடப் - . لتتجسسة سلالة

என்ருலும், இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை.

அந்தச் சந்தர்ப்பத்தில், எமிலிஸோலாவின் "எர்த்’ நாவலே நான் படித்து முடித்திருந்தேன். அதன் கதையையும் நயங் களையும் நண்பர்கள் ஜெயகாந்தன், விஜயபாஸ்கரன் இருவரி டமும் விவரித்த போது, இதை எழுதிக் கொடுங்கள். சரஸ் வதியில் புத்தகச் சுருக்கமாக வெளியிடலாம்' என்ருர்கள். அவ்விதமே எழுதினேன்.

98 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/104&oldid=561185" இலிருந்து மீள்விக்கப்பட்டது