பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில், விஜயபாஸ்கரன் புத்தகச் சுருக்கத்தைப் படிக்கும் முன்’ என்று ஒரு கட்டுரை எழுதினர்.

இப்படி ஒரு பகுதியை அவர் நவம்பர் இதழ் முதல் எழுத ஆரம்பித்தார். தமிழில் பிற மொழி நூல்கள் என்ற தலைப் பில் தமிழ் நாட்டில் நடைபெற்ற மொழி பெயர்ப்பு வேலே கள் பற்றியும், மொழி பெயர்ப்பாளர்களின் திறமைக்குறை பற்றியும் விரிவாக எழுதியிருந்தார்.

டிசம்பர் இதழில் வி. பா. கட்டுரையை அப்படியே எடுத்து எழுத வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்

"சில மாதங்களாக சரஸ்வதியில் வெளியான நண்பர் ஜெய காத்தனின் சில கதைகளைப் பற்றிப் பலவிதமான விமர்சனங் கனே எழுதி வந்தனர்.

அந்த விமர்சனங்களுக்கெல்லாம் அவரே ஒரு முறை பதில் எழுதினுள். மற்றும் பல முகம் அறிந்த, அறியாத அன்பர் கள் உங்கள் குரல் மூலம் பதிலளித்தனர்.

அந்த விமர்சனப் பகுதியை, பலவிதமான வாதப் பிரதிவா தங்களுக்குப் பின், முடிவுற்று விட்டதாக அறிவித்தேன்.

எனினும் தொடர்ந்து எனக்கும், உங்கள் குரல் பகுதிக்கும் பல நண்பர்கள் கடிதம் எழுதுகிறர்கள். அவற்றில் சில ஆபாசத்தைக் கண்டிக்கப் புகுவதாகக் கூறிக் கொண்ட போதிலும் ஆபாச விமர்சனமாக இருப்பது குறித்து வருந் தினேன்.

ஜெயகாந்தன் கதை ஆபாசமா, அவர்களின் இந்தக் கடிதங் கள் ஆபாசமா என்பதை அவற்றை எழுதிய அந்த அன் பர்களின் இலக்கிய மனச்சாட்சிக்கே விட்டுவிடுகின்றேன்.

இன்னும் சிலர், எனக்குத் தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதத்திலும், நேரிலும், மெத்த வளரும் மேற்கத்திய இலக்

100 / சரஸ்வதி காலம் 、[齐

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/106&oldid=561187" இலிருந்து மீள்விக்கப்பட்டது