பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படி யென்ருல் ஆபாச இலக்கியம் என்று ஒன்று கிடை யாதா என்று சிலர் கேட்கலாம். நிச்சயம் உண்டு! அதுஅந்த ஆபாச இலக்கியம் - முழுக்க முழுக்க ஆபாசத்தை யே நாடி, ஆபாசத்தையே உணர்த்தி, படிப்பவரை ஆபாச உணர்ச்சியிலேயே கிறங்க வைப்பதற்காகவே பிறக்கிறது.

ஆகையால் ஆபாசத்திற்காக இலக்கியம் பிறக்கக் கூடாது; இலக்கியத்தில் ஆபாசம் இருக்கலாம் என்ருகிறது அல்லவா? சரி. இப்பொழுது, ஆபாசம் எது என்ற கேள்விக்கு வரு வோம்.

தோட்டியின் வாழ்வைச் சித்தரிக்க புகும் கதையில் மலத்தின் தாற்றம் வீசத்தான் செய்யும்; அது ஆபாசமல்ல, தாய்மை யின் தவிப்பை உருவகப்படுத்தும் போது முலேமீது முகம் புதைத்துக் கிடக்கும் குழந்தையின் தோற்றம் தெரியத்தான் தெரியும்; இது ஆபாசமல்ல. யாருமில்லாத தனிமையில் வாய்க் கால் கரையில் புல்லுக்கட்டைப் போட்டுவிட்டு, தாலிச் சரட் டை கண்ணில் ஒற்றிக் கொள்ளும் கிராமத்துப் பறைச்சியின் பதிவிரதத் தன்மையைக் காட்டும் போது, கணவனின் நினை வால் பொங்கிப் பூரிக்கும் அவள் மார்பகம் தோன்றத்தான் தோன்றும். இதுவும் ஆபாசம் அல்ல,

அப்படியானுல் ஆபாசம் எது என்பது ஒரு கதையை முழுக்கப் படித்தபின் அது உணர்த்தும் மூல உணர்வு என்ன என்பதைப் பொறுத்ததாகும். அந்த மூல உணர்வு நேர்மையின் பாற்பட்டதாய், வளர்ந்து வரும் லட்சியங்களின் பாற்பட்டதாய் இருக்குமானுல், அவற்றின் நடுவில் வரும் ஆபாசம் போன்ற யதார்த்த சித்திரங்கள் ஆபாசமாக மாட்டா. மாருக, வாழ்வின் யதார்த்த நிகழ்ச்சிகளை ஊன்றி நோக்கி உற்று அறிந்த ஆசிரியரின் திறமைக்கு அவை சான்றுகளாகும்.

அல்லாமல், அவை ஆபாசமே என்று எனது நண்பர்கள்

102 / சரஸ்வதி காலம் ā

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/108&oldid=561189" இலிருந்து மீள்விக்கப்பட்டது