பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாதிப்பார்களேயாளுல் அவர்களே நான் ஒன்று கேட்க விரும் புகிறேன். c -

தர்மத்தின் வெற்றியையும், அதர்மத்தின் வீழ்ச்சியையும் சித்தரிக்கும் மகாபாரதத்தில் சிலர் சில ஆபாசங்களைக் கண்டுப்பிடிப்பதில் தவறென்ன இருக்க முடியும்?

புருஷோத்தமளுன ராமனேயும், பெண் திலகமான சீதையை யும் பாத்திரமாகக் கொண்ட ராமாயணத்தில் சிலர் சில ஆபாசங்களைக் கண்டுபிடிப்பதில் தவறு என்ன இருக்க முடியும்?

இவற்றின் மூல உணர்வு ஆபாசத்தில் கிளேத்ததல்ல; சந்தர்ப்ப சூழ்நிலைகளின் வர்ணனைகளோ, நிகழ்ச்சிகளோ ஒரு இலக்கியத்தின் தரத்தை ஆபாசமாக்கிவிட முடியாது என்ருகி விடுகிறது அல்லவா?

அப்படியிருக்க, ஒரு சில வார்த்தைகளுக்காக ஒருவரின் எழுத்தையே அபத்தமென்றும் ஆபாசமென்றும் முடிவுகட்டி விட்டு, பிற நூல்களைப் படிக்காமலேயே அதைப் படித்தும் பார், இதைப் படித்துப் பார். அவரைப்போல எழுது' என்று சிலர் எழுதியதனுலேயே, எமிலிஸோலாவின் இந்த :நிலம்" (Earth) புத்தகச் சுருக்கமாக வெளிவருகிறது.

இந்த நூலில் பல இடங்களில் நீங்கள் எதை ஆபாச’ மென்று கருதுகிறீர்களோ அவை வருகின்றன. அவை ஆபா சமா? இல்லை என்பதே என் அபிப்ராயம். இந்த நவீனம் பிறந்த சூழ்நிலையை மனதில் கொண்டால்தான் இந்த உண் மையை அறிய முடியும்.

ஆம்; அன்றைய பிரெஞ்சு நாட்டு விவசாயியின் வாழ்க்கை அப்படியெல்லாம் இருந்திருக்கிறது. அதில் கிளேத்து நிற்கும் மண்ணுசை. அதையும் கவனியுங்கள். - -

முகத்தைச் சுளிக்கவேண்டாம். இது எமிலிஸோலாவின்

蓟 வல்லிக் கண்ணன்/ 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/109&oldid=561190" இலிருந்து மீள்விக்கப்பட்டது