பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் புகழ் பெற்ற நாவல். தொழிலாளிகளே வைத்து எழுதப்பட்டது ஜெர்மினல். விவசாயிகளின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது இந்த நிலம். உலகம் இதை ஆபாச இலக்கியம் என்று கூறவில்லே என்பது கவனத்திற். குரியது.

இந்தப் புத்தகச் சுருக்கத்தில் நாங்கள் வேண்டுமென்றே வெறும் ஆபாசமான பகுதிகளை மட்டும் அடுக்கித் தரவில்லை. கதைத் தொடர்புக்கு வேண்டிய சம்பவக் கோவைகள் மட் டும்தான் இவை. கதையின் விஸ்தாரத்திற் புகுந்தால் இம் மாதிரியான காட்சிகள் அனந்தம். -

ஜெயகாந்தனின் கதைகளே ஆபாசமென்று கூறிய அன்பர் கள் இந்தப் புத்தகச் சுருக்கத்தைப் படித்துவிட்டு மீண்டு மொரு முறை அவருடைய கதைகளைப் பரிசீலிக்கவும்.

தேங்கி நசித்து வரும் இன்றைய சிறுகதை உலகிலே சரஸ் வதி தன்னுலியன்ற அளவுக்கு நவநவமான இலக்கியச் சாதனைகளே சாதித்து வருகிறது. இது நமது கோஷ்டி என்று கும்மாளமிடும் நண்பர்களின் கருத்துமட்டுமல்ல; நமது லட்சிய மும் போக்கும் நடைமுறைக்கு ஒத்து வராது என்று கூறி வரும் அன்பர்கள் கூட ஒப்புக்கொண்டு பாராட்டி எழுதிய உண்மையாகும்.

இந்திலையில் புதுமைகளைக் கண்டு நாமே, நம்மில் சிலரே ஒதுங்கி, அதன் நிழலைக்கூடக் காண விரும்பாத மனப் போக்குடன் அங்கே பார் இங்கே பார் என்பதெல்லாம் நமது சணுதனப் போக்கைத்தான் புலப்படுத்துகிறதே அல்லாமல் புதுமையை வளப்படுத்தும் போக்காகாது.

எமிலி ஸோலாவின் கதையில் மட்டும்தான் இந்த ஆபாசம்’ இருக்கிறதா? இந்த ஆபாசத்தைத்தான் நாங்கள் முதன்மைப் படுத்தி மூர்த்தண்யமாய் தாக்குவோம் என்பீர்களேயானுல் அந்தத் தாக்குதலிலிருந்து முற்போக்கு இலக்கியத்தின்

104 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/110&oldid=561191" இலிருந்து மீள்விக்கப்பட்டது