பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகையை நிறுத்திவிட வேண்டிய நெருக்கடி நிலைமை தோன்றிவிடுமோ? என்று கூட நண்பர் சஞ்சலப்பட்ட சம பங்கள் உண்டு.

ஆயினும், மன உறுதியோடு, சிறப்பான ஆண்டு மலர் ஒன்று கொண்டு வந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்

டார்.

"நம்மிடையே எழுத்துப் பரிச்சயம் ஏற்பட்டு மூன்று ஆண் டுகள் முடிந்து நான்காம் ஆண்டு பிறந்துவிட்டது, என்பதை நிஜனக்கும் போது எத்தனே பெருமிதம் உண்டாகிறது!

அந்தப் பெருமித உணர்வை நமக்கு நல்கிய அன்பர்களுக்குக் கனகாபிஷேகம் செய்வது போல் ஒரு மலர் கொண்டு வந்து காணிக்கை அளிக்க எண்ணினேம்" என்று மலரில் ஆசிரி பர் குறிப்பில் அறிவித்து, அது நிறைவேருமல் போய் விட் டதன் காரணங்களையும் எழுதவே காலம் துணை செய்தது? :பத்திரிகைகள் நிற்கத்தான் வேண்டும் என்று திர்ப்பந்திப் பது போல் காகிதவிலே ஏறிக்கொண்டே போகிறது ஒன்றுக்கு இரண்டு மடங்காய். இரண்டு மடங்கா? அதற்கும் அதிக மாக விலை ஏறிக் கொண்டே போகிற இந்நிலையில், ஏற்கென வே நிலத்து நிமிர்த்துவிட்ட பெரிய பத்திரிகைகள் கூட ஒஇயைக் கூட்டுகின்றன, சில பத்திரிகைகள் கணிசமான அளவுக்குப் பக்கங்களைக் குறைத்திருக்கின்றன. ஆனுல் அதே சமயத்தில் நமது பத்திரிகையின் பக்கங்கள் குறையவில்லை, கூடியிருக்கின்றன. பக்கங்கள் ம ட்டுமா நஷ்டமும் கூடத்தான்.' சரஸ்வதி மூன்ருவது ஆண்டில் ஜூலே முடிய ஒரு இதழ் 25 நயா பைசா விலையில் 80 பக்கங்கள் என்று தயாராகி வந்தது. ஆகஸ்ட் முதல் 96 பக்கங்கள் என அளவு அதிகரிக் கப்பட்டிருந்த போதிலும், விலையில் எந்த வித மாறுதலும் ஏற்படவில்லை.

105 சரஸ்வதி காலம் []

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/112&oldid=561193" இலிருந்து மீள்விக்கப்பட்டது