பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடக்கின்றன. மறுபுறம் ராட்சச ஆலைத்தொழில் மாதிரி பல பத்திரிகைகள் நடக்கின்றன. குடிசைத் தொழில் ரகப் பத்திரிகைகளில் அசோகா பாக்கையும் நஞ்சன்கூடு பல் பொடியையும் போல் பேரளவில் வளர்ந்துவிட்டவை உண்டு. பெருந்தொழிலாய் தொடங்கி நடக்கும் பத்திரிகைகளில், உள்ளுக்குள்ளே உளுத்துப்போய் ஆட்டம் எடுத்தவை உண்டு - . -

பத்திரிகை என்ருல், கலேத் திருப்பணி, இலக்கியத் திருப் பணி, சினிமாத் திருப்பணி, புனிதமான இலக்கியங்க&r நடத்தும் திருப்பணி, அறிவைப் பரப்பும் திருப்பணி, பண் பாட்டை வளர்க்கும் திருப்பணி என்றெல்லாம் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிருேம். இந்தத் திருப்பணிகளே யெல்லாம் நடத்துவதற்கென்றே தோன்றியிருக்கும் அவதார புருஷர்களாகப் பத்திரிகை முதலாளிகளைப் பாவிப்பவரும் உண்டு. அவர்களுடைய பத்திரிகையில் கூட சேவையே நமது குறிக்கோள் - லட்சியம் - மூச்சுக் காற்று - உயிர்த் துடிப்பு’ என்றெல்லாம் வரைந்திருப்பார்கள்.

பத்திரிகை நடத்தக் காகிதம் வேண்டும் என்பது மற்றவர் கள் கருத்து காகிதம் விற்கப் பத்திரிகை வேண்டும் என்பது பெரிய முதலாளி கருத்து. வெள்ளேக் காகிதமாக நியூஸ் பிரிண்டை ஆயிரமாயிரம் டன் விகிதம் நாள் தோறும் தொடர்ச் சியாக வாங்கி விற்க முடியாது. அந்தக் காகிதத்தை வாங்கி, அதிலே கொஞ்சம் மசியைத் தடவிக் கறுப்பாக்கி, ஊருக் குள்ளே - நாட்டுக்குள்ளே - நாலு திசையிலும் விட்டால், ஜனங் கள். எனக்கு, உனக்கு என்று அள்ளிக் கொண்டு போகிருர் கள். இந்த வியாபாரத்தை நாள் தவருமல் முடிந்தால் காலே யிலும் மாலேயிலும் ஒரே சீராக - ஏறி இறங்காதபடி - நிர்ப் பயமாக - நிச்சயமாக நடத்தலாம். அசுர அச்சுக் கூடமும் "எழுத்துக் கூலி'களான ஆசிரியர்களும் இதற்குத் தேவை யான அவசியத் தீமைகள்’. இவ்வளவு தான் விஷயம். மிகப் பெரும் பத்திரிகைகளின் இன்றைய நிலை - மர்மம் . எல்லாம் இதுவே.

町 வல்லிக் கண்ணன் , 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/115&oldid=561196" இலிருந்து மீள்விக்கப்பட்டது