பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருப்பதில் பயன் ஏதும் காண முடியாது. வளரும் இலக்கியத்தை ஊக்குவிப்பதில் செயல்பட வேண்டும்.

பல இன்னல்களுக்கிடையேயும் சரஸ்வதி முன்னேற்றப் பாதையில் ஏறுநடை போடுகிறதென்ருல் ஆசிரியரின் அமைதியான விடாமுயற்சியும் சுய விளம்பரம் வேண்டாத அன்பர்களின் விஷயதானமும், சிலபல நிதானமான வாசகர் களின் ஆதரவும் தான் என்பதை மறைப்பதற்கில்லே ... ... ஒவ்வொருவரும் பெருமுயற்சி எடுத்து அவ்வப்போது நடை முறைக்குகந்த யோசனைகள் கூறுவதோடு, சிரத்தையெ டுத்து விற்பனேயையும், சந்தாதாரையும் பெருமளவுக்கு சேகரித்தாக வேண்டும், வாசகர்கள் ஒரு மாதத்தில் ஒரே நாள், ஒரு நாளில் ஒரே மணி நேரம், உறவினரில் ஒருவரை அல்லது நண்பர்களில் ஒருவரை சந்தித்து, சரஸ்வதிக்காக மண்டியிடாமல், சண்டையிடாமல், சரஸ்வதியின் தரத்தை, அவசியத்தை, நிலையைக் கூறி முயற்சித்தால் வளர்ச்சி நிச்சயமுண்டு. முயற்சி திருவினையாக்கும் - இவை அவர் கடிதத்தின் முக்கிய பகுதிகள்.

"சரஸ்வதி’யின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆலோசனைகள் என்று தாங்கள் தங்கள் மேலான யோசனைகளைக் கூறக் கூடியவர்கள் அதிகமாகவே எதிர்ப்பட்டார்கள். யோசனை வள்ளல்"களுக்கு எப்போதுதான், எங்கேதான் பஞ்சம்?

செக்கோஸ்லோவேகிய நாட்டிலிருந்து தமிழ் மொழியைக் கற்று, தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்று, தமிழ்ப் படைப்புகள் பலவற்றை செக் மொழியில் மொழி பெயர்த்து அரிய சாதனைகள் புரிந்திருந்த அறிஞர் கமில்ஸ்வெலபில் சென்னேக்கு வந்திருந்தார். தெற்கு கடற்கரை ரோடு, 'பரீட்சை மண்டபத்தை ஒட்டிய வசதியான தனி அறை யில் தங்கியிருந்தார். ஒரு மாலே விஜயபாஸ்கரன், ஜெய காந்தன், நான் மூவரும் அவரைக் கண்டு பேசப்போயிருந் தோம். அப்போது, முற்போக்கு இலக்கிய ஆர்வம் உடைய வக்கீல் ஒருவரும் எழுத்தாளர் ஒருவரும் அங்கே வந்து

114 / சரஸ்வதி காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/120&oldid=561201" இலிருந்து மீள்விக்கப்பட்டது