பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல விழிப்பு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் வாசகர் வட்டம் ரசிகர் மன்றம்’ போன்ற அமைப்புக்கள் ஏற் படுத்தப் பட்டு, இலக்கியப் பிரியர்கள் கூடிப் பேசி விவா தங்கள் நடத்திப் பயன் பெறுகிருர்கள். இவ்வாறு கூடிப் பேச வாய்ப்புகள் இல்லாத விதத்தில் பலப்பல ஊர்களில், தரமான இலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் ரசிக வாசகர்கள் இருக்கத்தான் செய்கிருர்கள். அவர்கள் அனே வரையும் கண்டு கொண்டு, இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமும் ஊட்டமும் சேர்ப்பதற்கு இலக்கிய இயக்கம் நல்ல வாய்ப்பு அளிக்க முடியும்.

1958 - ல் சரஸ்வதி ( ஆகஸ்ட் ) இதழில் நா. பார்த்தசாரதி 'தரமுள்ள இலக்கியம்’ என்ற கட்டுரையை எழுதியிருக் கிருர், அதில் காணப்படும் வரிகள் இவை- .

'தரம் குறைந்த இலக்கியத்தைத் தான் வாசகர்கள் விரும்பு கிருர்கள்; அதனுல்தான் வெளியிடுகிருேம் என்று சிலர் நொண்டிச்சான்று கூறுகிருர்கள். வாசகர்களை நல்வழியில் உருவாக்குவதும், தரமுள்ளதைப் படிக்கத் துண்டுவதும்தான் பத்திரிகை தர்மம். தன் வழியில் தனது வாசகர்களே உடன. ழைக்க முயல வேண்டும் பத்திரிகையாசிரியன். வாசகர்களின் வழியில், தான் சென்று அவர்கள் ஆதரவைப் பெறமுயல் வது அறமன்று. பத்திரிகைகளேப் படிப்பவர்களே விட அதை வெளியிடுபவனுக்கும் அதற்கு எழுதிக் கொடுக்கும் எழுத் தாளர்களுக்கும்தான் பொறுப்பு அதிகம். ஒரு மனிதன் குடும்பப் பொறுப்பும் ஏழ்மையும் தெரியாமல் தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு போவதைக் கூட மன் னிக்கலாம். பொறுப்பில்லாமல் கருத்துகளைப் பெற்றுக் கொண் டே போவதை மட்டும் ஒரு போதும் மன்னிக்க முடி யாது. --

“மொழியின் ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொரு துறையிலும் புதிய இலக்கியங்களும், அவற்றுக்கான சூழ்நிலைகளும் உரு வாகி வருகிற இந்தச் சமயத்தில் தரமுள்ளதை உண்டாக்க

担 வல்லிக்கண்ணன் / 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/125&oldid=561206" இலிருந்து மீள்விக்கப்பட்டது