பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் எழுதலானுர். இந்த வரிசையில் 1. சாமிசிதம்பரனுர் 2. எஸ். ராமகிருஷ்ணன் 3. சிதம்பர ரகுநாதன் 4, வல்லிக் கண்ணன். (இது ஆகஸ்ட் முடிய. அதற்குப் பிறகு, சரஸ் வதி மாதம் இருமுறை ஆக்கப் பட்டுவிட்டது. அது பற்றி எழுதுகையில், இவ்விவரம் தொடரப்படும்.)

அரசியல் குறிப்புகள் எழுதும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. எஸ். ஆர். கே. தராசு என்ற தலைப்பில் எழுத முன் வந்தார். ஒன்றிரு இதழ்களில்தான் இது இடம்பெற்றது. மகாகவி வள்ளத்தோல், சக்கரைச் செட்டியார், ஆனந்தகுமார சாமி போன்ற பிரபலஸ்தர் வாழ்க்கை வரலாறுக் கட்டுரைகளே கே, இராமநாதன் எழுதி வந்தார். பால் ரோட்ஸன், தகழியின் செம்மீன் லெபனுன் போன்ற அவ்வப்போது செய்தி முக்கியத்துவம் பெறுகிற-விஷயங்கள் பற்றி வி. ராதாகிருஷ்ணன் கட்டுரைகள் எழுதினர். மாஸ்கோ சென்று சில தினங்கள் தங்கி வந்திருந்த இலங்கை எழுத்தாளர் எச். எம். பி. முஹிதீன் கார்க்கியைக் கண்டேன்’ என்ருெரு நீண்ட கட்டுரையை எழுதினர். இது தொடர்ந்து பிரசுரமாயிற்று. அவ்வப்போது இலங்கைக் கடிதம் வெளிவந்தது. இதை எழுதிக் கொண்டிருந்தவர் எச்செம்பி.” - டொமினிக் ஜீவா, கே. டானியல், தில்லையூர் செல்வராஜன் முதலிய இலங்கை எழுத்தாளர்கள் ஆகஸ்ட் முதல் சரஸ் வதிக்குக் கதைகள் எழுதத் தொடங்கினர். மெய் கண்டான் இதழ் தோறும் புதுக்குறள் எழுதி வந் தார்.

சரஸ்வதி’யின் வரலாற்றில் முதல் தடவையாக, சி. சு. செல்லப்பா கட்டுரை எழுதினர். தமிழ் நாவலும் பண்பா டும்’ எனும் கட்டுரை மே இதழில் வெளியாயிற்று. க. நா. சுப்பிரமணியம் சரஸ்வதிக்குத் தனது ஒத்துழைப்

D வல்லிக் கண்ணன் 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/129&oldid=561210" இலிருந்து மீள்விக்கப்பட்டது