பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூருவளி ஒவ்வொரு இதழும் நீங்கள் ரசித்துப் பாதுகாத்து வைக்கவேண்டிய சேமநிதியாகும்.

உங்களுக்கு விருப்பமான விஷயத்தைப் பற்றி எழுதுகிறது சூருவளி.’’

க. நா. சுப்ரமண்யம் ஆசிரியராகவும், கி. ரா. துணை ஆசிரிய ராகவும் பொறுப்பு வகித்து நடத்திய வாரப் பத்திரிகை இது. இதில் வந்த விஷயங்கள், ஜனரஞ்சகமான முறையிலும், இலக்கியத் தரத்தோடும், பிசினஸ் வெற்றியாகவும் ஒரு பத் திரிகையை நடத்த முடியுமா பார்க்கலாமே என்று ஒரு சோ தன முயற்சி நடைபெறுவதாகவும், அப்போது லாபகரமாக வளர்ந்து கொண்டிருந்த ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் போட்டியாக ஒன்றை நடத்தலாமே என்ற தன்மையில் பலப்பரீட்சை செய்வதாகவும், எண்ண வைத்தன.

முதல் இதழின் முதல் பக்கத்திலேயே சூருவளி எனும் தலேப்பில் பட்டணத்துச் செய்திகளும் தமிழ்நாட்டு விஷயங் களும் நகைச்சுவையோடு, பரிகாசத் தொனியோடு, அலசப் பட்டிருந்தன. உதாரணத்துக்கு, முதல் பகுதியைத் தருகி றேன்:

  • சென்னைக்கு வருகிறவர்கள் தங்களைப்போலவே சென்னைக்கு விஜயம் செய்திருக்கும் சுரு:மீனப் பார்க்காமல் போகக் கூடாது. கரையிலிருந்து தான் பார்ப்பேன் என்கிருர்கள் மனி தர்கள்’. சுரு:மீனின் அபிப்பிராயம் வேறு.

சுரு:மீனும் ஒரு மீன் தான். அது கரைக்கு வந்தால் மனிதர் கள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனல் அந்தச் சில மனிதர் கள் தண்ணிருக்குள் போனுல் அவர்களைச் சுருeன் சாப் பிட்டு விடும். அதற்கும் பற்கள் உண்டு. அது சைவமல்ல. சுருமீனைச் சைவளுக்க இதுவரை செய்யப்பட்ட முயற்சிகள் பயனளித்ததாகத் தெரியவில்லை. அதைச் சைவளுக்க முயன்றதே தப்பு, அதன் பிரஜா உரிமை பாதிக்கப்பட

J வல்லிக் கண்ணன் / 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/13&oldid=561093" இலிருந்து மீள்விக்கப்பட்டது