பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைத் தர முன்வந்தார். அவருடைய 'ரெட்டைப் பிள்ளை பார் கதை ஜூன் இதழில் வந்தது எது இலக்கியம்? என்ற கட்டுரை. ஜூலையில் வந்தது. திருக்குறள் இலக்கியம் இல்லை. அது பாராயண நூல் மேடைப் பிரசங்கிகளுக்கு நன்ருக எடுத்துக் கையாளுவதற்கு உபயோகமாகும். ஒரு Book of Quotations. Spit 67 out; St-Égi Glärsärsm வேண்டும் என்று உபதேசிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு சுரங்கம்... இலக்கியம் என்கிற பெயரால் குறளேப் பெருமைப் படுத்துவதற்கு அர்த்தமேயில்லை என்று தான் தோன்று கிறது’ என்று தனது கருத்தை அழுத்தமாக விளக்கியிருந் தார் க. நா. சு., இக்கட்டுரையில் இலக்கியத்துக்குப் பதில் *பற்றி இலக்கியங்கள் வளர்ந்து தழைத்துக் கொண்டிருப் பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். "சரஸ்வதி பிற மொழிச் சிறுகதை மொழி பெயர்ப்புகளுக்கும் நாடகங்களுக்கும் அவ்வப்போது இடம் அளித்து வந்தது. மார்ச் முதல் ஆகஸ்ட் முடிய உள்ள ஆறு மாதங்களில் வந் தவை இவை -

முதல் திருட்டு . தகழியின் மலேயாளக் கதை கோடங்கால் கிருஷ்ணசாமி தமிழாக்கம். பெண் - கிருஷ்ணசந்தரின் இந்திக் கதை அசோகன் மொழிபெயர்த்தது. சீன எழுத் தான் லூசுன் கதை, அறிஞன், முட்டான், அடிமை - தமிழில் ரா. சு. கி.

நாடகம்: நரக வாழ்க்கை - டி. செல்வராஜ். பசிராஜா - கொடு முடி ராஜகோபாலன், மேலான யோசனை - கெண்டையன் பிள்ளே (வ. க. ).

ஆகஸ்ட் இதழில், நீங்கள் தரும் துணிச்சல்!” என்று ஆசிரியர் குறிப்பு எழுதினர் விஜயபாஸ்கரன். அது நினைவு கூறப்பட வேண்டிய ஒன்று தான்- -

“சென்ற இதழில், அடுத்த மாதம் முதல் சரஸ்வதி மாதம் இரு முறை வெளிவரும் என்று அறிவித்திருந்தோம். அந்த அறி

124 சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/130&oldid=561211" இலிருந்து மீள்விக்கப்பட்டது