பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொரு நோக்கும் போக்கும் தேவை என்று நாம் கருது கிருேம். ஏனெனில் இன்று நாம் உண்மையாகவே குருடாகிப் போன திருதராஷ்டிரப் பிறவிகளைப் பற்றிக் கூடக் கவலே கொள்ள வேண்டியதில்லை; ஆனல் பதிபக்தி என்ற பெய ரால் அசட்டுத்தனமாகக் கண்களே மூடிக் கட்டிக் கொண் டாளே காந்தாரி- அவளேப் போன்ற விழி கண் குருட்டு விமர்சன கர்த்தாக்களைப் பற்றிதான் கவலை கொள்ள வேண்டி யிருக்கிறது. இதேைலயே நாம் இத்தகைய சுதந்திரமான, சுயமான, சிந்தனைகளையும், சிருஷ்டிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்று கருதுகிருேம், இந்த நோக்கத்தை வாச கப் பெருமக்கள் வரவேற்பார்கள் என்றே நம்புகிருேம்.

புதிதாக ஆசிரியர் குழு’ என்று சில பெயர்களே விளம்பரப் படுத்தியதை, இலக்கிய வளர்ச்சிப் பணியின் மேம்பாட்டுக் கான முயற்சி என்பதைவிட, ஒரு அரசியல் தந்திரம்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.

சரஸ்வதியின் இலக்கிய வளர்ச்சிப் பணியை மேலும் மேம் படுத்த’ ஆசிரியர் குழு ஒன்று தேவை என்று வி. பா. உண்மையாகவே கருதியிருந்திருப்பாரானல், சரஸ்வதியின் தரமும் நயமும் பணியும் சிறப்பாக விளங்க வேண்டும் என்று இதழ் தோறும் அக்கறையும் ஆர்வமும் காட்டி, சென்னையில் இருந்து கொண்டே ஒத்துழைப்பு நல்கி வந்த வல்லிக் கண்ணன், ஜெயகாந்தன், சாமி சிதம்பரனுர் ஆகியோரின் பெயர்களே அவர் இணைத்திருப்பார். மதுரையிலும் திருநெல் வேலியிலும், நாகர்கோயிலிலும் இருந்த எழுத்தாளர்களின் பெயர்களே விளம்பரப்படுத்தியிருக்க மாட்டார். நண்பர் அவ் விதம் ஒரு புதிய ஏற்பாட்டை மேற்கொண்டதன் அடிப் படை நோக்கமே வேறு, அதற்கான காரணங்களும் விசேஷ

Fశఔ;}ఙ!.

விஜயபாஸ்கரன் கம்யூனிஸ்ட் ஆக இருந்த போதிலும், ஒரு நல்ல இலக்கியப் பத்திரிகை நடத்தவே ஆசைப்பட்டார்; அவர் நடத்தும் பத்திரிக்கைக்கு 'கம்யூனிஸ்ட் கலர் ஏதும்

128 / சரஸ்வதி காலம் - 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/134&oldid=561216" இலிருந்து மீள்விக்கப்பட்டது