பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமையும், கட்சியின் முக்கியஸ்தர்களும் அந்தப் பத்திரி கையின் வளர்ச்சிக்கு ஆதரவும் நல்கினல், அது பாராட்டப் பட வேண்டிய பண்பு ஆகும். மகிழ்ச்சி கொள்ளாமல் ஆதர வும் காட்டாமல் போயினும் கூட, இடைஞ்சல்கள் ஏற்படுத் தாமலாவது இருந்திருக்கலாம். அப்போது அது நல்ல மணி தாபிமானம் ஆக அமைந்திருக்கும். ஆனல், சரஸ்வதியின் வரலாறு காட்டுகிற பாடம் வேறு விதமாக இருக்கிறது.

சரஸ்வதியின் விற்பனையாளர்கள் பலர் ஜனசக்தி ஏஜண்டு களே தான். பல ஊர்களில் கட்சியின் முக்கியஸ்தர்களே பத் திரிகையைப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்கள். கட்சித் தலைவர் ஜீவானந்தம் போகிற ஊர்களில் எல்லாம், சரஸ்வதிக்கும் கட்சிக்கும் எவ்விதமான தொடர்பும் கிடை யாது, அதை விஜயபாஸ்கரன் தனது சொந்தப் பொறுப்பில் நடத்துகிருர். அவர் இஷ்டம் போல் எல்லா விதமான விஷயங்களையும் அதில் வெளியிடுகிருர், என்ற தன்மையில் அபிப்ராயம் ஒலி பரப்பலானுர். சரஸ்வதிக்கும் கட்சிக்கும் ஒட் டும் இல்லை; உறவும் இல்லை. ஆகவே கட்சி உறுப்பினர் கள் அதை ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று கூட அவர் வார்த்தைகளைப் பரவவிட்டதாக அக்காலகட்டத் தில் எனக்குத் தகவல்கள் கிட்டியது உண்டு.

மதிப்புக்குரிய ஜீவானந்தம் அவர்கள் அப்படியும் செய் திருக்கக் கூடும் என்ற எண்ணம் உறுதிப்படும் வகையில், "சரித்திரம் மீண்டும் ஒலித்தது சமரன் காலத்தில். சில வருடங்களுக்குப் பிறகு, நண்பர் விஜயபாஸ்கரன் சமரன்' என்ற அரசியல் வாரப்பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி ஞர். தி. மு. க எதிர்ப்பு அணியை உருவாக்கி, அது வாரம் 13,000 பிரதிகள் விற்பனையாகிக் கொண்டிருந்த உச்சகட்டத் தில் சமரன் பத்திரிகைக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் ஒட்டும் இல்லை: உறவும் இல்லை. அதில் வரும் கருத்துக்கள் கட்சியின் கருத்துகளைப் பிரதிபலிப்பனவும் அல்ல. ஆகவே, கட்சியின் உறுப்பினர்கள் சமரனே ஆதரிக்க வேண்டிய அவ

130 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/136&oldid=561218" இலிருந்து மீள்விக்கப்பட்டது