பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. இராமநாதன், கு. அழகிரிசாமி, சாமி. சிதம்பரளுர், அசோகன், ந. சிதம்பர சுப்ரமணியன், ஜெயகாந்தன், ஆகி யோர், சென்னைக்கு வந்தேன்’ என்று தங்கள் அனுபவங் ஆ&ளயும் அபிப்பிராயங்களையும் சுவையாகவும் சூடாகவும் எழுதினர்கள். ஒவ்வொரு கட்டுரையும் தனித்தன்மையோடு அருமையான எண்ணக் களஞ்சியமாக விளங்கியது.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் க. நா. சு. ஏற்பாடு செய்த இலக் கிய வட்டம் கூட்டத்தில் எழுத்தாளர் சிலர் எதற்காக எழுதுகிறேன்? என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வாசித் தார்கள். சூடும் சுவையும் சிந்தனையும் நிறைந்த அக்கட்டு ரைகளே பிறகு சி. சு. செல்லப்பா எழுத்து பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டதோடு, எழுத்துப் பிரசுரம் ஆக, புத்தக வடிவிலும் இலக்கியப் பிரியர்களுக்கு கிடைக்க வகை செய்தார். அது ஒரு அற்புதமான புத்தகம், அருமையான நூல், புதுமையான கட்டுரைத் தொகுப்பு என்றெல்லாம் இன்றும் ரசிகர்களால் வியந்து பாராட்டப் படுகிறது. (எதற் காக எழுதுகிறேன்? கட்டுரை எழுதியவர்கள் - தி. ஜானகி ராமன், ஜெயகாந்தன், ஆர்வி. சாலிவாஹனன் கு. அழகிரி சாமி, க. நா. சுப்பிரமண்யம், ந. பிச்சமூர்த்தி, ஆர். சண்முக சுந்தரம், சி. சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன். லா. ச. ராமாமிருதம்.)

அதே போல. சென்னைக்கு வந்தேன் கட்டுரைகளும், புத்த கமாகப் பிரசுரம் பெறும் வாய்ப்பைப் பெற்றிருந்தால், இலக் கியப் பிரியர்களுக்கு இனிய விருந்தாக அமைந்திருக்கும். ஆளுல் அது நடக்கவில்லே,

"மாதமிருமுறை காலத்தில் சரஸ்வதிக்கு க. நா. சுவின் சேவை மிகுதியாகக் கிட்டியது. மயன்’ என்ற பெயரில் அவர் இதழ்தோறும் கவிதைகள் எழுதினுர், நாவலுக்கு விஷயம், தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, இலக்கிய விவாதங்கள், குசிகர் குட்டிக் கதைகள்’ (அ. மாதவையா எழுதிய கதைகள் பற்றியது) என்று கட்டுரைகளும் எழுதினர்.

I வல்லிக் கண்ணன் 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/139&oldid=561221" இலிருந்து மீள்விக்கப்பட்டது