பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாமா என்று ஒரு கோஷ்டியினர் ஆணித் தரமான பிரச்னை ஒன்றை எழுப்ப முயன்றனர். இந்த கோஷ்டியினருக்கு தண்ணியைக் கண்டால் பயம் என்று ஒருசிலருடைய அந்த ரங்கமான அபிப்பிராயம்."

இந்தப் பாணியில் செய்திகளின் விளக்கம் இருந்தது.

ஆயகலைகள் என்ற தலைப்பில் சங்கீதம், சினிமா விமர்சனம். அகல் விளக்கு’ என்று அரசியல் விவகார விளக்கம். ராஜீய விஷயமாகத் தலையங்கம். அங்கே என்று அயல் நாட்டுச் செய்திகள். பெரிய மனுஷாள்’ எனும் தலைப்பில், முதல் இதழில், ஸ்டாலின் பற்றி எழுதப்பட்டிருந்தது. பின் னர், ரூஸ்வெல்ட், ஹிட்லர், முசோலினி, சியாங்கே ஷேக் முதலிய பெரியமனிதர்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தனர். *ராமபாணம் என்று புத்தக மதிப்புரை. சிங்காரி என்ற பெண்கள் பகுதி. இவற்றுடன் கதைகள், கவிதைகள், ஓரங்க நாடகம் எல்லாம் உண்டு. அவ்வப்போது விஞ் ஞானக் கட்டுரை, பொருளாதாரக் கட்டுரை போன்றவை இடம் பெறும்.

பி. எஸ். ராமையா, புதுமைப்பித்தன், சிதம்பர சுப்ரமண்யன், கு. ப. ரா. ஆகியோர் அடிக்கடி கதைகள் எழுதினர்கள். பாரதிதாசன், ச. து. சு. யோகியார் கவிதைகள் வந்தன. யோகியாரின் கவிதைகளைவிட, கட்டுரைகள் அதிகமாக இப் பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன. "யாப்பிலாக் கவிதை' கள் தனிக் கவனிப்பைப் பெற்றிருந்தன. தொடர்கதையும்

"யாப்பில்லாக் கவிதை” என்றும், வசன கவிதை என்றும் குறிப்பிடப்பட்ட கவிதைகளே ந. பிச்சமூர்த்தியும், கு. ப. ராஜ கோபாலனும் மணிக்கொடி”யில் அடிக்கடி எழுதி வந்திருக் கிருச்கள். அவை விரும்பிப் படிக்கப்பட்டு ரசிக்கப் பெற்ற னவே தவிர, விவாதம் ஒன்றையும் கிளறிவிடவில்லை.

8 / சரஸ்வதி காலம் 다

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/14&oldid=561094" இலிருந்து மீள்விக்கப்பட்டது