பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜூலை இதழில் க. நா. சு. எழுதிய எது இலக்கியம்? என்ற கட்டுரைக்கு மூன்று பேர் பதில் அளிக்க முன் வந் தார்கள். சோலை, அ. வேதாசலம், பொ. சுந்தரமூர்த்தி நாய ஞர் ஆகியோர் எழுதிய கருத்துக்களும் க. நா. சு. பதிலும் 20- 9- 58 இதழில் பிரசுரிக்கப்பட்டன:

'திருக்குறள் இலக்கியமா என்று கேட்டு நான் எழுதிய கட்டுரைக்குப் பதில்கள் ஒரு முந்நூருவது வரும் என்று எதிர் பார்த்தேன், மூன்று தான் வந்திருக்கின்றன குறளைத் தொழிலாக கொண்டு உழைப்பவர்களுக்கு அதில் உள்ள ஈடுபாடு இவ்வளவு தான் போலும் சிந்திக்கத் தொடங்கி ஒல் தங்கள் பிழைப்புப் போய்விடுமே என்கிற பயத்தில் சிந்திக்க மறுக்கிருர்கள். பதில் சொல்ல மறுக்கிருர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. வேறு காரணங்களும் இருக்கலாம் தான் - இருக்கக் கூடாது என்பதில்லை, ஆணுல் யோசித்துப் பார்த்ததில் எனக்குத் தெரியவில்லே வேறு காரணங்கள் இருப்பதாக, இப்படி ஆரம்பித்து, மூன்று பேருக்கும் தனித் தனியே பதில் கூறிவிட்டு க. நா. சு. இவ்வாறு முடிவுரை எழுதினர்.

"குறள் அடிகளில் இல்லாத விஷயங்களேக் கற்பனை செய்து கொண்டு ஆஹா-ஊஹா என்று அமர்க்களப்படுத்துகிற விஷ யம் குறள் தோன்றிய கி.பி. ஏழாம் நூற்ருண்டிலிருந்து இன்று வரை ஒரு ஆயிரத்து இரு நூறு வருஷங்களாக நடந்து வந் திருக்கிறது. இந்த உரையாசிரியர்கள் குறள் பாடினியர்கள் இவர்களேயெல்லாம் விட அழகாக சிலப்பதிகார ஆசிரியரும், கம்பனும் சில குறள் அடிகளே இலக்கியமாக்கி உபயோகித் திருக்கிருச்கள் என்பது தெளிவு. பழமொழிகளுக்கும், நீதி, சட்டம் போன்றவற்றை நிலைநாட்டுகிற நூல்களுக்கும் இலக் கியத்தில் இடம் கிடையாது; கம்பராமாயணத்தையும், சிலப் பதிகாரத்தையும், காரைக்காலம்மையார் பாடல்களையும் விட திருக்குறள் பலருக்குப் பல சந்தர்ப்பங்களில் மேற்கோள் காட்டவும், கட்சியை ஸ்காபிக்கவும், பண்பு பேசவும்,

134 / சரஸ்வதி காலம் 霍

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/140&oldid=561222" இலிருந்து மீள்விக்கப்பட்டது