பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில் நடத்தவும் பயன்பட்டிருக்கலாம். ஆணுல் அதனுலெல் லாம் இது இலக்கியமாகி விடாது என்பது என் துணிவு.

  • திருக்குறள் இலக்கியமா? என்பது பற்றி க. நா. சு. கருத் துக்களே மறுத்தும் ஆதரித்தும் வந்த பல கடிதங்களின் முக்கியப் பகுதிகள் 25 - 10 - 58 இதழில் அச்சிடப்பட்டன. தமிழ் இலக்கியமும், தத்துவ்ப்போராட்டமும் என்று ரகுநாதன் தொடர்ந்து கட்டுரைகளும், திருச்சிற்றம்பலக் கவிராயர் கவி தைகளும் வந்து கொண்டிருந்தன.

எஸ். ராமகிருஷ்ணன், பாரதியின் கடவுட் கொள்கை, சர்வோதயம், சக்கரவர்த் தி பீட்டர் போன்ற கட்டுரைகள் எழுதினர்.

சரஸ்வதி, சிறுகதைக்கு எப்போதும்போல் தாராள இடம் அளித்து வந்தது. காலத்தால் சாகாத கதை களும் புதிய சோதனை முயற்சிகளும், வளமான கற்பனைகளும், கலைநயப் படைப்புகளும் சரஸ்வதியில் மிகுதியாகவே வந்துள்ளன. சுந்தர ராமசாமியின் சன்னல், பிரசாதம், அடைக்கலம், செங் கமலமும் ஒரு சோப்பும், போட்டோஆல்பம், ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஒரு ஆண்டி, பிணக்கு, போர்வை; எனது பெரிய மனுஷி, பொம்மைகள், அலேகள் ஆகிய அருமை யான கதைகள் இக்கால கட்டத்திலேதான் பிறந்துள்ளன. ராஜநாராயணனின் மாயவன்’ என்ற கதை ஒரு இதழில் வந்தது.

இலங்கை எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, கே. டானியல், காவலூர் ராசதுரை, சிலேயூர் செல்வராசன் கதைகளும் அடிக்கடி பிரசுரமாயின. வித்வான் நடராசா, முருகையன், எச். எம், பி முஹிதீன் பிரேம்ஜி ஆகியோரும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

மலையாளம், உருது, ஹிந்தி மொழிக் கதைகளின் தமிழாக்கம் அபூர்வமாக இடம் பெற்றது.

如 வல்லிக்கண்ணன், !35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/141&oldid=561223" இலிருந்து மீள்விக்கப்பட்டது