பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்து வந்திருக்கிற, வருகின்ற தமிழ் இலக்கிய சேவை யினுல்தான் என்று உங்களுக்கு தான் கூறவேண்டிய அவ சியமில்லை. எனினும் நமது சாதனைகளே - புதிய சோதனைகளே. சற்றே திரும்பிப் பார்ப்போம்:

- சரஸ்வதி பல நல்ல எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு அளித் திருக்கிறது.

-தமது சிருஷ்டிகளால் நாட்டிலேயேநல்ல எழுத்தாளர்கள் என்று அவர்கள் ஏற்றம் பெறுவதற்கு இடம் தந்திருக்கிறது. -புதிய முயற்சிகளுக்கும் சோதனைகளுக்கும் ஊக்கம் அளித் திருக்கிறது.

--நமது தமிழ்ப் பத்திரிகைகளெல்லாம் பிரஷ்டம் செய்த ஈழத்து எழுத்தாளர்களின் சிருஷ்டிகளே, அவை நல்ல இலக் கியங்கள் என்று தேர்ந்த மாத்திரத்திலேயே, அன்புக் கரம் நீட்டி அவற்றை வாங்கித் தமிழகத்துக்குத் தருவதன் மூலம் ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ் வாசகர்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

--தத்துவ ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் பிறமொழி இலக்கியங்களேயும், நமது இலக்கியங்களேயும், விமர்சனம் புரிந்து வந்திருக்கிறது.

சிறுகதை சாம்ராட் புதுமைப்பித்தனப் பற்றி பல்வேறு அபிப்பிராயம் கொண்ட பல்வேறு எழுத்தாளர்களின் கருத் துக்கள் மோதுவதற்குக் களம் அமைத்துத் தந்திருக்கிறது. -தமிழ்ச் சிறுகதை உலகிலேயே சிறந்தவை எனப்படும் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய கதைகளையும், தமிழ்ப் பத்திரிகைகளே வெளியிடத் துணியாத சில புதிய சோதனை கள் போன்ற கதைகளையும்- சிறுகதை வளர்ச்சி ஒன்றையே கருத்தாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது.

--மறுமலர்ச்சி யுகத்தில் மணிக்கொடி போன்ற பத்திரிகை கள் தமக்கென ஒரு சகாப்தத்தையே தோற்றுவித்துக்

[] வல்விக்கண்ணன் / 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/145&oldid=561227" இலிருந்து மீள்விக்கப்பட்டது