பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டது போல் புதுமை இலக்கிய யுகத்தில் சரஸ்வதி: ஒரு சகாப்தத்தைத் தோற்றுவித்துவிட்டது.

--சிலர் விரும்பியோ விரும்பாமலோ கூறுவதுபோல் சரஸ் வதி கோஷ்டி, என்ற ஒன்றை உண்மையாகவே அது இலக் கிய உலகில் உண்டாக்கிவிட்டது.

ஆம், எழுத்தாளர்களின் இதயவெளிச்சம் சரஸ்வதியின் மூலம் மட்டுமே வாசகர்களுக்கு நன்ருகத் தெரியும்.'

13. இலக்கிய இதய மலர்

"சரஸ்வதி 1959 ஆண்டு மலரில் வாசக நண்பர்களுக்கு என்று தலைப்பிட்டு, சரஸ்வதியின் ஐந்தாண்டு சாதனையின் சாரத்தை எழுதிய விஜயபாஸ்கரன் தொடர்ந்து முக்கிய கருத்துக்கள் சிலவற்றையும் சுட்டிக் காட்டியிருந்தார். இன் றைக்கும் பொருந்துகிற உண்மைகள் தான் அவை - "சரஸ்வதியின் பணி தரம் மிகுந்தது; தன்னேரில்லாதது. இவ்விதம் ஆண்டுதோறும் சாதனை பல புரிந்து வரும் சரஸ் வதியின் இலக்கிய வாழ்வில் ஐந்து ஆண்டுகள் போய் ஆரும் ஆண்டு பிறக்கிறது. இந்த ஐந்தாம் ஆண்டு மலரை, பொங்கல் மலராக 128 பக்கங்களில் குறைந்த விலையில் கொண்டுவருவது என்றே முதலில் தீர்மானித்திருந்தோம். ஆசைகள் போல் எல்லாம் வளர்ந்தன. 200 பக்கங்கள்! பக் கங்கள் அனைத்தும் விஷயங்கள்தான். வெற்றுப் படங் களோ, வீண் பாவலாக்களோ இல்லை.

இப்படிச் சொல்வதன் மூலம் சித்திரங்களின் மேல் எங்க ளுக்கு வெறுப்பு என்று அர்த்தமல்ல. சித்திரங்களுக்காகவே ஒரு பத்திரிகை இருக்கலாம். அதுவே இலக்கியப் பத்திரி

140 / சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/146&oldid=561228" இலிருந்து மீள்விக்கப்பட்டது