பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையாக இருக்க முடியுமா? துரதிர்ஷ்டவசமாக சித்திரங் களுக்காகவே இலக்கியப் பத்திரிகை இருக்க வேண்டிய நிலைமை தமிழ் நாட்டில் வந்து விட்டது. சித்திரங்கள் இல் லாமலேயே ஒரு இலக்கியப் பத்திரிகை இருக்க முடியும், இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிருேம். ஏனெனில் சித்திரக் கலையை செழுமைப்படுத்தும் வகையில் தமிழ்ப் பத்திரிகைகளில் சித்திரங்கள் வெளிவருவதில்லை. எப்படி வெறும் கவர்ச்சி’க் கதைகளே வெளியிட்டு இலக்கியப் பம் மாத்துப் பண்ணுகிருர்களோ, அவ்விதமே கவர்ச்சிப்படங் களே வெளியிட்டுச் சித்திரக் கலக்கு துரோகம் செய்கிருர் கள் பத்திரிகைக்காரர்கள், கலை அம்சம் உள்ள சித்திரங் களே தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாவதில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஒரிரு சமயங்களில் கலே அம்சத் தோடு வெளிவரும் சித்திரங்களுக்கும் தமிழ் நாட்டில் மவுசு’ இருப்பதில்லை. இந்த நிலை போகவேண்டுமானுல். ஓவியக் கலேயும் ஒவிய ரசனையும் தமிழ் நாட்டில் இன்னும் பரவ லாக வளர வேண்டும். இந்தியாவில் உள்ள பிற மொழிப் பத்திரிகைகளில் வெளி வரும் சித்திரங்களைப் பார்க்குங்கால், நமது சித்திரக் கலேயும் சித்திர ரசனையும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பது தெரிய வரும்.

நம்மிடையே, கலைநயமேயில்லாத படங்களுக்காகக் காசைக் - கரியாக்கி; காகிதத்தை வீணுக்கிப் பத்திரிகைத் தொழிலேயே பாழாக்குபவர்களே நிறைந்துள்ளனர். இந்தக் கைங்கரி யத்தை சரஸ்வதி செய்ய விரும்பவில்லை. எனினும், தமிழ்ப் பத்திரிகை உலகில் பிறமொழிப் பத்திரிகைகளைப் போன்று சித்திரக்கலையின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையி லுள்ள படங்களை வருங்காலத்தில் வெளியிடப் போவதும் சரஸ்வதி பத்திரிகை ஒன்றுதான். அதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. ஆனல் உருவாகிக் கொண்டிருக் கிறது.

பார்க்கப் போனுல் - - இன்றைய சூழ்நிலையில் - மூவர்ண

Q வல்லிக் கண்ணன் / 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/147&oldid=561229" இலிருந்து மீள்விக்கப்பட்டது