பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டையும் பக்கத்துக்குப் பக்கம் படங்களும் நிரப்புவது சிறந்த வியாபாரக் கலையாக இருக்கலாம்; விளம்பரக் கலை யாக இருக்கலாம்; மக்களின் ருசி'யைப் புரிந்துகொண்ட "மதிநுட்பக் கலேயாக இருக்கலாம். எங்கள் சுவையும் இவ் வளவுதான் என்று காட்டிக் கொள்ளாத ஏமாற்றுக் கலையாக வும் இருக்கலாம். ஏனென்ருல், சில பத்திரிகையாளரிடம் நேரில் பேசும்போது, அவர்கள் நாங்கள் வெளியிடும் படங் கள் எங்களுக்கே பிடிப்பதில்லே ஆளுல் ஜனங்களுக்கு அது தானே பிடிக்கிறது என்கிருர்கள். சரஸ்வதி வாசகர்களாகிய உங்களை நாங்கள் அவ்விதம் நினைக்கவில்லை.

பத்திரிகையின் லட்சியம், சாதனையாவும் மூவர்ண அட்டைப் படங்கள் என்ற அளவில் அடங்கிவிடுமா என்ன? பெரும் பான்மையான பத்திரிகைகளும் அவற்றின் வாசகர்களும் அவ் விதம்தான் சொல்லுகிருர்கள். அவற்றை நாம் என்றும் ஏற்க மாட்டோம், இந்தப் பத்திரிகை உலகத்தின் சணுதனத்தை சீர்கேடான சம்பிரதாயத்தை உடைத்தெறிவதே புதிய, லட்சிய, இலக்கியப் பத்திரிகைகளின் முதற் கடமை. பகட்டுக்காகவா பத்திரிகை?

தரமிக்க கட்டுரைகள், இலக்கிய நயம் செறிந்த கதைகள், நல்ல நல்ல கவிதைகள்- - இவற்றில் மேலும் மேலும் முன் னேறக் கைக்கொள்ளும் புது முயற்சிகள்- ஆகியவை மூல மே ஒரு பத்திரிகை நின்று நீடித்து பயன் தரத்தக்கதாகவும் இருக்க முடியும். -

சரஸ்வதி வாசகர்களாகிய உங்களே, வெறும் பகட்டுத்தனத்

துக்கும், போலித்தனத்துக்கும், ஆடம்பரத்துக்கும் பல்விளிக்

கும் ரசனையுடையோர் என்று நாங்கள் கருதவில்லே. சரஸ்வதி வாசகர் என்ருலே அவருக்கு ஒரு தரமுண்டு என்று நாங்கள் நம்புகிருேம். உங்களுக்கு இலக்கிய மதிப்பீட்டுத் திறனும், தேர்ந்த ரசனே உள்ளமும் உண்டு என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. உங்கள் இலக்கிய ரசனையை மாற்றுக் குறைத்தோ சிறுமைப்படுத்தியோ நாங்கள் கணிக்கமாட்டோம். அதனுல்

142 / சரஸ்வதி காலம் ü

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/148&oldid=561230" இலிருந்து மீள்விக்கப்பட்டது