பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மணிக்கொடி”யில் நடந்த சூடான, சுவையான, இலக்கியச் சண்டை மொழிபெயர்ப்பு - தழுவல் பற்றியது ஆகும். புதுமைப்பித்தன் அழுத்தமாகச் சில அபிப்பிராயங்களே எழுதினர். கு. ப. ரா. க. நா. சு., சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் மறுத்தும் எதிர்த்தும் வாதாடினர். பு. பி. காரசார மாக விரிவான பதில் ஒன்று எழுதினர். இந்தப் பேணு யுத்தம் இலக்கிய வரலாற்றில் தனி இடம் பெறக்கூடியது.

அதைப்போல் பரபரப்பூட்டும் இலக்கியச் சண்டை ஒன்றை *சூருவளியில் நடத்தவேண்டும் என்று க. நா. சு., எண்ணி யிருக்கலாம். மயன் எழுதிய வசன கவிதையைத் தாக்கி ஆசிரியருக்குக் கடிதம் ஒன்று பிரசுரிக்கப்பட்டது. அப் புறம் மயன் கவிதைக்கு ஆதரவாக ஒரு கடிதம் பிரசுரிக் கப்பட்டது. யாப்பில்லாக் கவிதையைப் பரிகாசம் செய்து ஒரு கவிதை வந்தது. அதைக் கேலி செய்து, இலக்கணக் கவிதை பாணியில், நாணல் ( அ. சீனிவாச ராகவன்) பாட்டுக்கள் எழுதினர். தொடர்ந்து ஆசிரியருக்குக் கடிதம்’ பகுதியில், யாப்பில்லாக் கவிதைக்கு ஆதரவாக ஒரு அபிப் பிராயம் வெளியாயிற்று. அத்துடன் இவ்விவகாரம் முற்றுப் பெற்றது. (கடிதங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை க. நா. சு. வே. எழுதியிருப்பார் போலும்!) இச்சர்ச்சை பரபரப்பான அல்லது பயன் நிறைந்த விவாதமாக அமையவேயில்லை.

சூருவளி பிரமாதமான சாதனைகளைப் புரிந்துவிட்டதாகவோ, அழுத்தமான பாதிப்புகளே ஏற்படுத்திவிட்டதாகவோ சொல்ல முடியாது. அது 20 இதழ்களோ என்னவோதான் வந்திருக் கிறது. (எனது பார்வைக்கு அகப்பட்டவை 18 தான்.) வாரப் பதிப்பாக ஆரம்பிக்கப்படாமல், மாசிகையாகவோ, *மாதம் இருமுறை ஆகவோ நடத்தப்பட்டிருந்தால் சூருவளி உருப் படியாக ஏதேனும் செய்ய முடிந்தாலும் முடிந்திருக்கக் கூடும்!

ஆர்ட் தாளில் சினிமாப் படங்கள் அச்சிட்டு இதழ்தோறும் இணைத்திருந்தார்கள்.

辽 வல்லிக் கண்ணன் / 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/15&oldid=561095" இலிருந்து மீள்விக்கப்பட்டது