பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்ந்த எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கருத்துரையும் 10 - 4 - 59 இதழில் பிரசுரமாயின.

சாகித்திய அகாடமி விவகாரத்தைப் பற்றி ரகுநாதன் சாகித் திய அகாடமியும் தமிழும் என்ற தலைப்பில் விரிவாகவும் விளக்கமாகவும் ஒரு கட்டுரை எழுதினர். அது இரண்டு இதழ்களில் இடம் பெற்றது. அகாடமியின் விதிகள் பரி சளிக்கப்பட்ட நூல்களின் தன்மைகள், குழுவினர் பற்றிய விவரங்கள் அவர்களைப் பற்றிய திரை மறைவுச் செய்திகள் முதலியவற்றை அவர் தெளிவாக எடுத்துச் சொல்லி, தனது கருத்தை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் வெளியிட்டி ருந்தார். இக்கட்டுரையில் இவ் விவகாரத்தில் சரஸ்வதியின் பணியும், ரகுநாதன் கட்டுரையும் மிகுந்த கவனிப்பையும் பாராட்டுதலையும் பெற்றன.

ரகுநாதனின் தமிழ் இலக்கியமும் தத்துவப் போராட்டமும்’ கட்டுரைத் தொடர் இதழ் தோறும் வந்து கொண்டிருந்தது. அத்துடன் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கம்பன் காட்டும் கற்பின் கனலி என்ற தொடரும் வரலாயிற்று. வழக்கம் போல் தரமான சிறு கதைகள் பிரசுரிக்கப்பட்டன. அவ்வப் போது, இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் மொழி பெயர்ப்புகளும் இடம் பெற்றன. சசிதேவன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்த கிருஷ்ணன் நம்பியின் கதைகள் அடிக்கடி வந்தன. க. நா. சுப்பிரமணியம், சாமி. சிதம்பரனர் கட்டுரைகள் வழக்கம்போல் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. அ. இராகவன் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் கமில் ஸ்வெலபில் கட்டுரைகளும் அபூர்வமாக எப்போதாவது வந்தன.

இலங்கை எழுத்தாளர் செ. கணேசலிங்கன் மராத்தி நாவலா சிரியர் வி. ஸ். காண்டேகரைப் பேட்டிகண்டு எழுதிய கட் டுரை, படங்களோடு, மார்ச் 2, இதழில் பிரசுரமாயிற்று. "தமிழ்தட்டச்சின் தந்தை ஆர். முத்தையா பற்றிய கட்டுரை ஒன்று மே மாத இதழில் வெளியிடப்பட்டது. எழுதியவர்,

口 வல்லிக்கண்ணன் / 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/153&oldid=561235" இலிருந்து மீள்விக்கப்பட்டது