பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. மாணிக்கவாசகர். திரு. முத்தையாவின் படம் அந்த இதழின் அட்டையில் அச்சாகியிருந்தது. சரஸ்வதி அட் டைப் படங்களுக்காக அதிகம் சிரமப்படவில்லை. வாத்துகள் மொட்டை மரம். சிரிக்கும் குழந்தை, விதைக்கும் விவசாயி என்று அவ்வப்போது கைக்குக் கிடைத்த போட்டோக்களை பிளாக் செய்து, கறுப்பு மையில் அட்டைமீது அச்சிட்டு மகிழ்வுற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சரஸ்வதியில் புதிதாக வரத் தொடங் கிய ஒரு பகுதி பலரது கவனத்தைக் கவர்ந்தது. பெரும் பேச்சுக்குப் பொருளாயிற்று. சிலருக்கு எரிச்சல் ஊட்டியது. அ. தைரியநாதன் எழுதிய ஒய்வு நேரத்தில் எனும் பகுதி தான் அது. அது வெறும் இலக்கிய வம்பு தான். எழுத்தா வார்களைப் பற்றிய அக்கப்போர், இரண்டு மூன்று எழுத்தா 5ளர்கள் கூடினுல் என்ன பேசுகிருர்கள்? அவையும் அபூர்வ மாக சிறிதளவு பேசப்படும். பொதுவாக எல்லோரும் பேசிக் கொள்வது என்னவோ, அவரையும் இவரையும் . அஜனவ ரையும்- பற்றிய வம்பளப்புகளாகத் தான் இருக்கும்.

அப்படிப் பேசிக் கொள்வதை பத்திரிகையில் அச்சிட்டால் என்ன என்று தோன்றி விட்டது அ. தைரியநாதனுக்கு: ஆகவே சரஸ்வதியில் ஒய்வு நேரத்தில் என்ற பகுதி தலைகாட்டியது. அது எப்படிப்பட்ட பகுதி என்று தெரிந்து கொள்வதற்கு, அநேக சாம்பிள்கள் கொடுப்பது தவிர வேறு வழியில்லே. பின் வருபவை சரஸ்வதியின் வெவ்வேறு இதழ் களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை.

ஒழிந்த நேரத்தில் விபசாரம் செய்தால் உப்பு புளிக்காச்சுது என்பது ஒரு தினுசான குடும்ப ஸ்திரீயின் சித்தாந்தம் என்று வசனம் சொல்லுவார்கள். உப்பு புளிக்கு மட்டுமல்ல, காரம், தித்திப்பு எல்லாவற்றிற்குமே ஆச்சு என்று இன்று இலக்கிய சேவை செய்ய, ஒய்வு பெற்றவர்கள் எல்லோரும் முன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. புனே பெயரிலும்

148 சரஸ்வதி காலம் 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/154&oldid=561236" இலிருந்து மீள்விக்கப்பட்டது