பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறித்து ஒவ்வொரு தமிழனும் சந்தோசப்படுவான் என்பதில் சந்தேகமேயில்லே. சர்வகலாசாலை சார்பில் பணியாற்ற டாக் டர் செட்டியார் தன் பட்டம் பதவி பொறுப்பு அனுபவம் முதலியவற்றினல் சகல விதங்களிலும் தகுதியானவர் என்று தான் சொல்ல வேண்டும். எல்லாத் தகுதிகளும் பூர்ணமாக உடையவர் அவர் என்று நாம் எல்லோருமே அவரைப் பாராட்டுவோம். ஆனல் மற்றவர்கள் சாதாரணமாக மறந்து விடக் கூடிய ஒரு தகுதியும் அவருக்குண்டு - ஆங்கிலத் தமிழ் அகராதியைப் பதிப்பிட, அதை இங்கு நான் குறிப் பிட விரும்புகிறேன். அவர் ஆங்கிலத்தை தமிழ் போலவும் தமிழை ஆங்கிலம் போலவும் பேசுவார்’.

கலியுகக் கர்ண மகாராஜா அவர்கள் இருபத்தையாயிரம் அளித்து ஒரு நாடகம், ஒரு நாடகம்’ என்று கதறுகிருர் -- முன் காலத்து ராஜாக்கள் ஒரு வீரன், ஒரு வீரன்’ என்றும், ஒரு குதிரை! ஒரு குதிரை! என்றும் கத்துவார்களசமே அது போல காந்திக் கதறலின் ஆசிரியரும், பிடிராஜ்யக் காரரும் நாற்பது ஆயிரம் ரூபாய்க்கு நாலணு தர்மக் கணக் குப் போதும் என்று பிறருக்கு உபதேசித்து நாடகம் (சினி மா) எழுதிப் பணம் பண்ண முயலுபவரும் மற்றவர்களும் இந்தக் கலியுகக் கர்ணனுக்கு அபயம் அளித்திருக்கிருச்கள். உங்கள் பணத்தை-- இந்த இருபத்தையாயிரம் என்ன, மற்ற தையும் நாங்களே பார்த்துக்கொண்டு விடுவோமே! 250 பேரைக் கூட்டித் தேநீர் விருந்தளிப்பானேன். இதற்காக? என்று கேட்கிருள்களாம்.

நியாயமான கேள்விதான், ஆளுல் போட்டிப் பந்தய மனப் பான்மை விடுமா? அல்லது ஒரு காதலே 500, 500, 5000, என்று பகிர்ந்தளிக்கும் மனப்பான்மை வெண்குஷ்டம் மாதிரிப் பிடித்துக் கொண்ட பின் விடுமா? 250 பேர் போ தாது. 2500 எழுத்தாளர் இல்லையா தமிழில்? இல்லா விட் டால் பல விதங்களிலும் உற்பத்தி செய்கிருேம் என்று அதி பர் சவால் விட்டாலும் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

○ - வல்லிக் கண்ணன் 151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/157&oldid=561239" இலிருந்து மீள்விக்கப்பட்டது