பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலுவல்களைப் பரம ரகசியமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எதல்ை ஏற்படுகிறது என எண்ணும் போது, அதில் சம்மந்தப்பட லக்ஷக்கணக்கான பணமே காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

இந்த எஸ். எல். பி. டி. ஸ்தாபனத்திகுல் அதில் வேலை பார்க்கிற புருஷ லக்ஷணம் படைத்த உத்தியோகஸ்தர் களுக்கு லாபமே தவிர எழுத்தாளர்களுக்கோ, பிரசுரகர்த்தாக் களுக்கோ, அல்லது தமிழ் இலக்கியத்துக்கோ எவ்வித லாப மும் இந்த மூன்று நான்கு வருஷங்களில் ஏற்படவில்லே என்பது பிரசித்தமான விஷயம். தமிழில் மட்டும் தான் எஸ். எல். பி. டி. இவ்வளவு மோசமாக செயல் பட்டிருக்கிறதா, அல்லது மற்ற தெலுங்கு மலேயாள, கன்னட மொழிகளிலும் இப்படித் தானு என்பது தெரியவில்லை. -

இந்த ஓய்வு நேரத்தில் உப்பு புளிக்காகக் கூட இல்லாமல் இலக்கிய வி(ப)சாரம் செய்யும் இந்த அதைரியநாதன் தயார் என்று சரஸ்வதி வாசகர்களில் பலரும் யோசனை செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டதும், அதைரிய நாதனுகிய எனக்குத் திருப்தியாகத் தான் இருந்தது. தமிழ் வசனத்தின் தந்தையாகிய பெஷ்கி என்பவர் தைரியநாதஸ் வாமி என்று பெயர் வைத்துக்கொண்டார். நான் அதைரிய நாதன் என்ற பெயர் சூட்டிக் கொள்வது நியாயம் என்றே தோன்றியது. -

  • யார் இந்த அதைரியநாதன் என்கிற கேள்விக்குப் பலர் பல விதமாய் பதில் சொல்கிருர்களாம். இதை எழுதுவது மிஸ் டர் ரகுநாதன் தான் என்று சிலரும், சரஸ்வதி ஆசிரியரே தான் என்று சிலரும் அபிப்பிராயப்பட்டதாகவும், இருவரும் இல்லை, இந்த மாதிரிக் குயுக்திகள் எல்லாம் நண்பர் வன கணுவுக்குத்தான் பிடிக்கும் என்று சிலரும் சொன்னதாகவும் அதெல்லாம் இல்லவே இல்லை; இந்த மாதிரிச் சண்டைகள் எல்லாம் போடக் கூடிய விஷயங்களேச் சொல்லிவிட்டுச்

● வல்லிக் கண்ணன் / 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/159&oldid=561241" இலிருந்து மீள்விக்கப்பட்டது