பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘சூருவளியில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய அம் சம் அதன் அட்டையின் முகப்புத் தோற்றம். சூருவளியின் வேகத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் பளிரிடும் வர்ணங்களில் காட்சி அளித்தன. நான்கு அல்லது ஐந்து இதழ்களுக்கு ஒரு தடவைதான் மேலட்டைச் சித்திரத்தில் மாறுதல் இருந் தது. ஆளுல் இதழ்தோறும் கலர் மாற்றம் பளிச்சிட்டது.

சூருவளி ஓய்ந்து ஒடுங்கிய பின்னர், சென்னையில் மறு மலர்ச்சி இலக்கிய வேகமும் சோர்ந்து குன்றி விட்டதாகவே தோன்றியது. லட்சிய வேகத்தோடு இலக்கியப் பணியில் ஈடுபட்ட எழுத்தாளர்களில் அநேகர் கவர்ச்சிகரமான - லாப கரமான-வேறு துறைகளில் (சினிமா, ரேடியோ, தொழில் முதலியவற்றில்) உற்சாகமாக இறங்கி விட்டார்கள்.

அதுவரை, மறுமலர்ச்சி இலக்கிய வேகம் தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தான் உயிர்ப்போடும் உணர்வோடும் செய லாற்றக்கூடும் என்று ஒரு கருத்து நிலைபெற்றிருந்தது. 1940க் குப் பிறகு அது பொய்ப்பிக்கப்பட்டது. தலைநகருக்குத் தெற் கேயும்-நகரத்திலிருந்து மட்டுமின்றி ஒரு சிற்றுாரில் இருந்து கூட-இலக்கிய வேகம் செயல் மலர்ச்சி பெறக்கூடும், வெற் றிகளே எய்தமுடியும் என்பது நாற்பதுகளில் நிரூபணமா யிற்று. இதை நிலைநாட்டிய பெருமை கலா மோகினி' "கிராம ஊழியன்’ என்ற இரண்டு பத்திரிகைகளுக்கு உரியது.

C.

இ கலாrேகிரிை

‘மணிக்கொடி எழுத்தாளர்கள், அந்தப்பத்திரிகை மறைந்த பின்னர், கலைமகள் மாசிகையில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆண்டுதோறும் அவர்களது ஆற்றலை எடுத்துக்காட்டும் வகையில் தினமணி வருஷமலர் வெளி வந்து கொண்டிருந்தது. -

10 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/16&oldid=561096" இலிருந்து மீள்விக்கப்பட்டது