பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாது மாதிரி இருந்து விடுபவர் தோழர் க. நா. சு. தான் என்று சிலரும் சொன்னதாகத் தெரிகிறது. யாராக இருந் தால் என்ன? மறைமுகமாக, ஒருவருக்கு பின் பலர் பேசு வதை, நேரடியாக எழுத்திலே எழுதலாம்; இல்லாவிட்டால் பேசாதிருக்க வேண்டும் என்று தான் இப்பகுதியை எழுதத் தொடங்கினேன்.”

பேராசிரியர், பெரும் புலவர், சொற்செல்வர் ஒருவர் பற்றி ஒரு செய்தி கிடைத்தது எனக்கு. நான் வெறும் வாயை மெல்லுகிறவன் தானே! இந்தப் பேர் ஆசிரியருக்கு அவர் பிறந்தபோது குப்பை என்று பெயர் வைத்திருந்தார்களாம். எப்படித் தான் அவர் பெற்றேர்களுக்கு தெரிந்ததோ - அவர் பிற்காலத்தில் எழுதுகிற நூல்களால் குப்பை என்கிற பெய ருக்கு எல்லா விதங்களிலும் அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று. இவருக்கு சாகித்திய அகாடமியார் தங்க ளுடைய (இதுவரை) குப்பைப் பரிசுகளில் ஒன்றை அளித்தது தகும்! தகும்! என்று முழங்க வேண்டியது அவசியம்தான்'

“ஏதோ பத்திரிகையில் தலையங்கம் எழுதுகிறவர் குத்துமதிப் பாக அரசியல் விஷயங்களைப் பற்றி எழுதிவிட்டுச் சம்ப ளத்தை வாங்கிக்கொண்டு போகலாம், அதை விட்டு விட்டு, இலக்கிய விமர்சனம் செய்கிறேன் என்று சிலர் முன்வர வேண்டிய அவசியமென்ன என்பதுதான் நமக்குத் தெரிய மாட்டேன் என்கிறது. சேக்கிழாரைப் பற்றிப் பேச வேண் டுமா? நான் தயார். திருத்தக்கதேவரா? இதோ நான் இருக் கிறேன். தமிழ் நாவலா? இதோ! தமிழ்க் கவிதையா? நான் என்று கிளம்புகின்ற தமிழ்நாட்டு ஏ. ஜி. வெங்கடாசாரியார் களைக் கண்டால் நமக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

பத்திரிகையில் வேலை பார்த்தால் சகலமும் தெரிந்துவிட வேண்டும் என்று நினைப்பதைப் போல முட்டாள் தனம் வேறு எதுவுமில்லை. இந்த முட்டாள் தனத்துக்கு அறிவாளி கள் போல இருப்பவர்களும் பலியாவது வருந்தத்தக்க விஷ

154/ சரஸ்வதி காலம் [...]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/160&oldid=561242" இலிருந்து மீள்விக்கப்பட்டது