பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமாகத்தான் தோன்றுகிறது. திணவெடுத்தவன் கை . . என்பது போல, மாலே ஏற்றுக்கொண்ட கழுத்தையும்" மேடை ஏறிவிட்ட அறிவாளியையும் பற்றி வசனம் சொல்ல லாம் போல இருக்கிறது. மேடை ஏறிப்பேச ஒரு அறிவாளி வந்து கூப்பிடுகிருன் - ஒரு அறிவாளி போகிருன் என்கிற நிலைமைக்கு மாற்றேயில்லையா? தனக்குத் தெரியாத விஷ யங்களும் உண்டு என்று ஒப்புக்கொள்ளத் தெம்பு படைத்த மனிதர்கள் இன்று தமிழ் உலகில் இல்லவேயில்லையா? வெட் கக்கேடுதான். -அ. தைரியநாதன் இப்படி எல்லாம் எழுதும் தைரியநாதன் யார் என்று தெரிந்துகொள்ளப் பலரும் விரும்பினர்கள். அப்படி எழுது வது யார் என்று கேட்பவர்களுக்கெல்லாம் அ. தைரியநா தன்தான் எழுதுகிருர் என்ற பதிலே சொல்லப்பட்டு வத் தது. க. நா. சுப்ரமண்யம்தான் அந்தப் பெயரில் ஒய்வு நேரத்தில் ட' என்ற பகுதியை எழுதிக் கொண்டிருந்தார்.'

சிறப்பான ஆண்டு மலரை வெளியிட்டதற்குப் பின்னர், சரஸ்வதி'யின் சிரமங்கள் அதிகரிக்கலாயின. அதற்கு எத் தஜனயோ காரணங்கள். காகித விலை உயர்வு, அச்சுக்கூலி உயர்வு, இதர உற்பத்திப் பொருள்களின் விலேயேற்றம்; தபால் சார்ஜ் உயர்வு - இப்படிப் பல. ஏஜண்டுகள் ஒழுங் காக விற்பனைப் பணத்தை அனுப்பி வைக்காததும் அவற்று டன் சேர்ந்துகொண்டது. நம்பிக்கை, உற்சாகம், உழைப்பு, ஊக்கம் முதலியவற்றை அதிகமாகவும், பணத்தை சிறிதள வுமே மூலதனமாகக்கொண்டு ஆரம்பித்து நடத்தப்படுகிறஸ்ர்க்குலேஷன் அதிகம் பெற்றிராத சிறு பத்திரிகைகளுக்கு எந்தக் காலத்திலும் எதிர்ப்படக்கூடிய தொல்லேகள் தான் இவை. பண பலமோ, விளம்பரதாரர்களின் பக்க பலமோ பெற்றிராத சிறு பத்திரிகைகள் சாந்தாதாரர்களேயும் விற் பனையாளர்களையுமே நம்பி வாழ்ந்து வளர வேண்டியிருக் கிறது.

இத்தகைய லட்சிய முயற்சிகளுக்கு பரபரப்பான விற்பனை

毽 வல்லிக் கண்ணன் ! 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/161&oldid=561243" இலிருந்து மீள்விக்கப்பட்டது