பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்க முடியாது. முக்கியமான ஊர்களில் கூட நூற்றுக் கணக்கில் விற்பனை இராது. விற்பனை செய்ய முன்வருகிறவர் கள் பத்துப் பிரதிகள், பதினேந்து பிரதிகள் என்று குறை வாக வரவழைத்து விற்க நேரிடுகிறபோது, இவற்றின் விற் பனேயில் அவர்களுக்கு அதிக அக்கறையோ ஆர்வமோ ஏற் படுவதில்லை. வாரம் தோறும் பலநூறு பிரதிகள் விற்பனையா கக்கூடிய பத்திரிகைகளின் மூலம் அவர்களுக்கு அதிகமான கமிஷன் கிடைக்க வழி இருக்கிறது. அதனுல், அப்படி விற் கும் பத்திரிகைகளின் கணக்கு வழக்குகளே ஒழுங்காக வைத்துக் கொண்டு, அவ்வப்போது பணத்தை அனுப்புவ தில் கருத்தாக இருப்பார்கள். மாதம் தோறும் பத்துப் பிர திகளோ, சற்று அதிகமாகவோ, விற்பனையாகிற சிறு பத்திரி கைகள் மூலம் கிடைக்கக்கூடிய சொற்பத் தொகையை அந் தந்த மாதமே அனுப்பிவிடுவதில் ஏஜண்டுகள் உற்சாகம் காட்டுவதில்லை. இந்த விற்பனை மூலம் கிடைக்கிற குறைந்த அளவு கமிஷனில் மணியார்டர் கமிஷனுக்கு வேறு செல வளித்தாக வேண்டுமே என்ற நினைப்பும் ஒரு முக்கிய காரணம்தான்.

அடுத்த மாதம் அனுப்பலாமே! அடுத்த மாதம் சேர்த்து அனுப்பிக் கொண்டால் போச்சு என்று மெத்தனமாக இருந்து, காலத்தை ஏலத்தில் விடவிட, பாக்கி அதிகமாக வளர்ந்து விடுகிறது. அப்புறம் மொத்தத் தொகையாக அனுப்புவதற்கு ஏஜண்டு சிரமப்பட வேண்டியிருக்கிறது.

C

17. தோற்றுவிட்டோமா?

இவ்வாறு பல ஏஜண்டுகளிடமிருந்து பணம் வராமல் பாக்கி கிடந்து விடுவதல்ை, பத்திரிகை நடத்துகிறவர்களும் சிரமங் களே அனுபவிக்க நேரிடுகிறது. ஆகவே, ஏஜண்டுகள் மூலம் விற்பனை வளர்ச்சிக்கு வழி தேடாமல், சந்தாக்களே அதிகரிப்

156 / சரஸ்வதி காலம் ロ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/162&oldid=561244" இலிருந்து மீள்விக்கப்பட்டது