பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதனுல் வளர்ச்சிக்கு உதவி பெறலாம் என்ற எண்ணம் இலக்கியப் பத்திரிகை நடத்துகிறவர்களுக்கு இயல்பாகவே உண்டாகிறது.

விஜயபாஸ்கரனும் அப்படித்தான் திட்டமிட்டார். சந்தா சே கரிப்பு மாதம் என்று காலம் குறிப்பிட்டு, அதற்கென ஒரு பரிசுத் திட்டமும் அறிவித்தார். அது 1959 மார்ச் 10-தேதி இதழில் வெளியாயிற்று--

“உங்களது நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் இதழ்தோ றும் பெற்று வளர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு ஏதாவது புதிய சாதனை புரிகிருேம் என்ற நற்பேற்றை அடைய வேண்டும் என்ற நல்ல லட்சியம் நிறைவேற எத்தனையோ தடைக்கற் கள் எதிர்ப்படுகின்றன. அவை அனைத்தையும் கடந்து நாம் முன்னேறுவோம் என்பது உறுதி.

ஐந்தாண்டுகள் முடிவுற்ற பின்னும் ஆரும் ஆண்டின் முதல் இதழ் வெளி வந்த பின்னும், இந்த ஐந்து ஆண்டுகளாக இலக்கிய அன்பர்களின் இதயங்களுக்கும் சரஸ்வதிக்கும் ஒரு நல்ல பரிச்சயம் ஏற்பட்டு விட்ட பின்பும், நாம் விலகி இருப் பது சரியல்ல. சரஸ்வதியை வாழ்த்திப் பாராட்டி எழுதி இருந்த அன்பர்களாகிய நீங்கள் கூட இன்னும் சந்தாதார ராக வில்லை யென்ருல் நம்முடைய உறவு இன்னும் பலப் படவில்லை என்று தானே அர்த்தம்?

சரஸ்வதி போன்ற ஆடம்பரமற்ற, தரமிக்க, இலக்கியப் பத் திரிகைகளுக்குச் சந்தாதாரர்கள் தான் முதுகெலும்பு போன்ற வர்கள்.

அந்தப் பலத்தில் அது நிமிர்ந்து நின்று பல கம்பீர சாதனைகள் புரிய முடியும். ஏனென்ருல், பத்திரிகையைப் பார்த்ததும் அதன்பால் கவர்ச்சி யேற்பட்டு, கடையில் தொங்குவதை வாங்கிக் கொண்டு போய்விடும் அளவுக்கு நமது பத்திரிகை காட்சிப் பொருள் மதிப்பு உடையதல்ல. இதன் தரமறிந்து, சுவையறிந்து

口 வல்லிக்கண்ணன் / 15?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/163&oldid=561245" இலிருந்து மீள்விக்கப்பட்டது