பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமறிந்து கேட்டு வாங்கிப் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் சில ஆயிரம் பேரே உள்ளனர். அந்தச் சிலரின் இலக்கிய ரசஆனயையும், மதிப்பீட்டுத் திறனையும், விமர்சனப் பார்வை யையும் அவர்களின் கடிதங்கள் நன்கு பிரதிபலிக்கின்றன. இவ்வித இலக்கிய நண்பர்களின் கடிதங்களிலிருந்து, இவர் கள் அனைவரும் சரஸ்வதி'யின் நேற்றைய வாழ்விலும். இன் றைய வளத்திலும், நாளேய வளர்ச்சியிலும் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னப்பட்டு உறவு பூண்டவர்களாக இருக்கிருர் கள் என்பது தெளிவாகிறது. ஆகையால், சரஸ்வதியின் பலத்தையும் வளத்தையும் பெருக்க இவர்கள் அனைவரும் தங்களால் ஆன உதவியைச் செய்ய முன் வருவார்கள் என்று நம்புகிருேம்.

அதற்காக, மார்ச், ஏப்ரல் மாதங்களே சந்தாதாரர் சேகரிப்பு மாதமாக அறிவித் திருக்கின்ருேம். சரஸ்வதியின் இலக்கியப் பணியில் நம்பிக்கை கொண்டுள்ள அன்பர்கள், அதன் வாழ்வில் அக்கறை கொண்டுள்ள நண் பர்கள் அக்னவரும் தங்களாலான ஒத்துழைப்பை அளிப்பது கடமையென இலக்கிய மனச்சாட்சி உடையோர் அஜன வரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அந்த சந்தா சேகரிக்கும் நண்பர்களுக்கு அன்பளிப்புகள் தரவும் திட்டமிட்டுள்ளோம். நமது அபிமான எழுத்தாளர் களான புதுமைப்பித்தன், சாமி. சிதம்பரளுர், ராமகிருஷ்ணன், ரகுநாதன், ஜெயகாந்தன் முதலியோரது நூல்களைப் பரிசாக அளிப்பதெனத் தீர்மானித்துள்ளோம். மார்ச் 1-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை சந்தா சேக ரித்து அனுப்பும் அன்பர்களுக்கு கீழ்க்கண்ட விதிகளின்படி புத்தகங்கள் அன்பளிப்பாகத் தரப்படும். விதிகள்: ஆண்டு சந்தாக்கள் நான்கு சேர்த்து ரூ 24 அனுப்புபவர்களுக்கு ரூ 5 மதிப்புள்ள புத்தகங்கள் அன்பளிப் பாக அனுப்பி வைக்கப்படும்.

158 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/164&oldid=561246" இலிருந்து மீள்விக்கப்பட்டது