பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்பதற்குப் பெருமையாகத்தான் இருந்தது, ஆனல் நண் பர்கள் வெற்றி என்று கருதுகிற இச்சாதனையை நிறைவேற்ற நாம் பட்டுள்ள துன்ப துயரங்கள், சோதனைகள், தடைகள், எதிர்ப்புகள் இவைகளே நினைத்துப் பார்த்தால். -

தமிழில் ஒரு புதிய லட்சியப் பத்திரிகையை நடத்த வேண் டும் என்ற ஆர்வத்தின் தூண்டுதலால் சரஸ்வதி”யை ஆரம் பித்தேன். பத்திரிகையைத் துவக்குகிற நேரத்தில் இதனுல் லாபம் அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந் ததில்லை. ஏறக்குறைய பத்து ஆண்டுகளாகப் பத்திரிகை தொழிலில் ஈடுபட்டுள்ள எனக்கு பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்கள் பூரணமாகத் தெரிந்தே இருந்தன. பத் திரிகை நடத்துவது நெருப்புடன் விளேயாடும் விளையாட்டு; பத்திரிகைக் காகிதம் முதலிய பொருள்கள் விலை ஏறி விற் கிற நேரத்தில் ஒரு பத்திரிகையைத் துவக்குவது சிரமத்தை மணமறிந்தே ஏற்றுக் கொள்ளும் செயல் என்பது தெரிந்தே "சரஸ்வதி"யைத் துவக்கினேன். எனக்கு ஒரு நம்பிக்கை மட் டும் இருந்தது. ஐந்து ஆண்டுகள் நஷ்டம் அடைவதற்குத் தயாராக இருந்தால் பின்னர் கவலையில்லை என்று நம்பி னேன். ஆகவே ஐந்து ஆண்டுகளுக்கு நஷ்டம் அடைவதற் குத் தயாராகவே சரஸ்வதியைத் துவக்கினேன்.

ஆளுல் என் நம்பிக்கை பொய்த்து விட்டது தோல்வியை ஒப்புக் கொள்வதில் தவறில்லை. ஐந்து ஆண்டுகள் முடிந்தும் நஷ்டம் குறையவில்லை; முன்னே விட அதிகரித்தே இருக் கிறது.

சரஸ்வதியை ஆரம்பித்த காலத்தில் ரீம் ஒன்றுக்கு 10 ரூபா யாக விற்ற பத்திரிகைக் காகிதம் இன்று சுமார் 27 ரூபா யாக விற்கிறது. அதாவது 23 மடங்குக்கும் அதிகம். சென்ற இரண்டு மாதங்களாக நாம் உபயோகித்து வரும், இந்திய நாட்டில் தயாராகும் காகிதம் ரீம் ஒன்றுக்கு 21 ரூபாயாக விற்கிறது. இதே போன்று பத்திரிகைக்குத் தேவையான ஒவ்வொரு பொருளின் விலையும் ஏகத்தாருக உயர்ந்துள்ளன.

160 / சரஸ்வதி காலம் 孪

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/166&oldid=561248" இலிருந்து மீள்விக்கப்பட்டது