பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதளுல் இந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு நஷ்டத் துக்குத் தயாராக இருந்தேனே, அதை விடப் பல மடங்கு நஷ்டம் அடைய வேண்டி ஏற்பட்டுவிட்டது. குறிப்பாகச் சென்ற நான்கு ஐந்து மாதங்களாக நஷ்டம் அதிகரித்து வருகிறது. இன்று வரை சரஸ்வதியின் மூலம் சுமார் ரூ. 15,000 நஷ் டம் ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை இப்படியே நீடித்தால் இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் சரஸ்வதியைத் தொடர்ந்து நடத்த முடியாது என்ற நிலைக்கு வந்திருக்கிருேம். நஷ்டம் எப்படி ஏற்படுகிறது? சரஸ்வதியின் ஒவ்வொரு பிரதி யின் அடக்க விலே மட்டும் சுமார் 4 அணு ஆகிறது. தபால் செலவு முதலிய செலவுகளும் சேர்ந்தால் சுமார் -4த் அணு வரை ஒரு பிரதிக்கு அடக்கமாகிறது. நாம் பத்திசி கையை நான்கு அணு விலக்கு விற்கிருேம். ஏஜண்டுகள் கமிஷன் போக நமக்கு ஒவ்வொரு பிரதிக்கும் 3 அணு கிடைக்கிறது. அதாவது ஒவ்வொரு பிரதியின் மூலமும் நமக்கு ஏறக்குறைய 1க் அணு நஷ்டம் ஏற்படுகிறது. பத் திரிகைகள் எல்லாவற்றுக்குமே இது தான் நிலை. ஆளுல் மற்ற பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் ஏராளமாகக் கிடைப் பதால் இந்த நஷ்டத்தை ஈடு கட்டி லாபமும் அடைய முடிகிறது. நம்மைப் பொறுத்த வரையில் விளம்பரங்கள் அதி கம் கிடைப்பதில்லே. ஆக நஷ்டத்தைக் குறைக்க முடிவ தில்லை. மேலும் மேலும் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு மூன்று வழிகளே இருக்கின்றன.

1. சிரமப்பட்டு விளம்பரங்கள் சேகரிப்பது. நமது அனுபவத் தில் இது உடனடியாக நிறைவேறக் கூடிய செயலாகத் தோன்றவில்லை.

2. நேரடியான சந்தாதாரர்களின் தொகையை அதிகப்படுத் துவது. சந்தாதாரர்களுக்கு அனுப்பும் பிரதிகளுக்கு ஏஜன்ஸி கமிஷன் ஏதும் இல்லாததால் ஓரளவு நஷ்டம் குறையும்.

如 வல்லிக்கண்ணன் / 161

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/167&oldid=561249" இலிருந்து மீள்விக்கப்பட்டது