பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நன் கொடை வசூலிப்பது. ஸ்தாபனங்கள் நடத்தும் பத்திரிகைகள் இம் முறையின் மூலமே நஷ்டத்தை ஈடுகட்ட முடிகிறது என்பது வாசகர்களுக்குத் தெரியும்.

இந்த மூன்று முறைகளின் மூலம் மட்டுமே நஷ்டத்தைத் தவிர்த்து தொடர்ந்து பத்திரிகையை நடத்த இயலும். இந்த மூன்று முறைகளில் சுலபமானது, காரிய சாத்தியமானது, இரண்டாவது கூறிய சந்தாதாரர் சேர்ப்பது ஒன்று தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகக் குறித்த தேதியில் வெளி வந்து கொண்டிருந்த சரஸ்வதி, சென்ற நான்கு மாதங்களாக குறித்த காலத்தில் வெளி வருவதில்லை. இதற்கு அச்சுப் பிரச்ஆன ஒரு காரணம். மற்ருெரு முக்கிய காரணம், ஏஜண் டுகளின் ஒத்துழைப்பின்மை. பல்வேறு காரணங்களால் சென்ற நான்கு ஐந்து மாதங்களாக நமது ஏஜண்டுகளில் பலர் நம்முடன் பூரணமாக ஒத்துழைக்கவில்லை. பில்தொகை களே உடனுக்குடன் அனுப்புவதில்லை. இதல்ை கால காலத் தில் பத்திரிகை வெளிக்கொணர முடியாததோடு பல சமயங் களில் பல ஊர்களுக்குப் பத்திரிகை அனுப்ப முடிவதில்லை.

இம்மாதிரியான பல பிரச்னைகளேயும், கணக்கில் எடுத்துக் கொண்டு ஆலோசித்தால், சரஸ்வதிக்கு சந்தாதாரர்களே அதிகம் சேர்ப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்து பத் திரி கையை நடத்த முடியும் குறித்த தேதியில் வெளியிட முடி யும்; மேலும் சிறப்பாக வெளியிட முடியும்.

சரஸ்வதி தமிழ்ப் பத்திரிகை உலகிலே ஒரு புதிய சகாப் தத்தைத் தோற்றுவித்திருக்கிறது; அதன் சேவை மகத்தா னது; பல புதிய சோதனைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்திருக்கிறது; வருகிறது என்று மனப்பூர்வமாக பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் எண்ணுகிருர்கள் என் பதை நமக்குக் கிடைக்கும் கடிதங்கள் அறிவிக்கின்றன. ஆகவே நிலைமையின் நெருக்கடியை வாசகர்களிடமே அறி வித்துப் பரிகாரம் தேட முனைகிறேன். வாசகர்களிடமிருந்து,

162/சரஸ்வதி காலம் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/168&oldid=561250" இலிருந்து மீள்விக்கப்பட்டது